.

JIO PHONE HOTSPOT INSTALL செய்வது எப்படி ? Thinachuvadi

 உங்கள் ஜியோ மொபைலில் hotspot இன்ஸ்டால் செய்ய வேண்டுமா?


உங்கள் ஜியோ போன்ல hotspot இன்ஸ்டால் செய்வதால் உங்களுக்கு பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக நமது ஜியோ போன்ல உள்ள டேட்டாவை மற்ற device - களுக்கு நாம் ஷேர் செய்ய முடியும். இதனால் நாம் ஜியோ போன்ல இருக்கிற டேட்டா மூலம் மற்ற device-களில் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

 எடுத்துக்காட்டாக , நாம் ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஜியோ போன் உள்ளது என வைத்துக்கொள்வோம். நம்மிடம் வேறு ஏதும் மொபைல் இல்லை என வைத்துக்கொள்வோம். நம்மிடம் ஒரு லேப்டாப் மட்டும் உள்ளது என்றால் ஜியோ போனில் உள்ள நம்முடைய டேட்டாவை லேப்டாப்பில் கனெக்ட் செய்து நிறைய advantage செய்து கொள்ள முடியும்.


சரி நமது ஜியோ போனில் எப்படி ஹாட்ஸ்பாட் இன்ஸ்டால் செய்வது?

அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் omnisd என்கிற ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். அதை இன்ஸ்டால் செய்வது பற்றிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 
Jio Hotspot File Download 



PARUVATHAMALAI PARTHIPAN
File Type: TEXT
Password : PTM TECH TAMIL
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog


Password : PTM TECH TAMIL

நம்முடைய ஜியோ மொபைலில் omnisd இன்ஸ்டால் செய்து விட்டீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஜியோ மொபைலில் இன்ஸ்டால் செய்ய கூடிய வகையில் இருக்கும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கொண்ட பைலை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு நீங்கள் ஒரு sd card (memory card). எடுத்து அதனை ஜியோ மொபைலில் செருகிக் கொள்ள வேண்டும். அந்த மெமரி கார்டில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனுக்காண பைலை பதிவேற்றி வைத்திருக்க வேண்டும்.

 இப்போது உங்கள் மொபைலை ஆன் செய்து கொள்க. பிறகு file manager என்கிற அப்ளிகேஷனுள் செல்க. அதில் உங்கள் மெமரி கார்டில் உள்ள பைலை உங்கள் ஜியோ மொபைலில் இருக்கும் download என்கிற பகுதியில் சேமித்து கொள்க.

அதன் பிறகு omnisd அப்ளிகேஷன்கள் சென்றால் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் வரிசையாக வரும். அதில் ஒன்றன் பின் ஒன்றாக கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்க.

நீங்கள் பதிவேற்றி வைத்திருக்கும் அப்ளிகேஷன்களில்  JJHOTSPOT  என்று ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். அதுதான் உங்கள் மொபைலில் பயன்படுத்தக்கூடிய ஹாட்ஸ்பாட் ஆகும். 

சரி இந்த  ஹாட்ஸ்பாட் ஐ எப்படி நாம் பயன்படுத்துவது ?

உங்கள் மொபைலில் டேட்டாவை ஆன் செய்துவிட்டு பிறகு  JJHOTSPOT அப்ளிகேஷனுள் செல்க. இப்பொழுது உங்களுக்கு தானாகவே ஹாட்ஸ்பாட் ஆன் ஆகி இருக்கும். இந்த ஆப்ஸ் பாட்டை நீங்கள் வேறு மொபைல்களிலும் லேப்டாப் கம்ப்யூட்டர் இதுபோல எந்த ஒரு  சிஸ்டத்திலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சரி இந்த ஹாட்ஸ்பாட் ஐ எப்படி நிறுத்துவது?

இதை நிறுத்துவது ரொம்பவும் சுலபம் தான். அதற்கு நீங்கள் உங்கள் ஜியோ மொபைலில் உள்ள டேட்டாவை ஆப் செய்து வைத்தால் மட்டும் போதும். தானாகவே ஹாட்ஸ்பாட் ஆஃப் ஆகிவிடும்.

1 Comments

Previous Post Next Post

نموذج الاتصال