தற்கொலை செய்வதற்கு முன் தன் கணவருக்கு " I Love You" என கணவரின் மொபைலுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு மனைவி ஐந்தாம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!!
காதல் அள்ளி அள்ளி அன்பையும் கொடுக்கும்!! மிகவும் அரிதான உயிரையும் கொடுக்கும் என நிரூபித்து இருக்கிறார் டெல்லியை சேர்ந்த ஒரு இளம் பெண்.
டெல்லியை சேர்ந்தவர் நேஹா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடன் பணி செய்து வந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இவர்கள் காதல் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.
திருமணம் செய்து சில ஆண்டுகளாக மனதார ஒற்றுமையாகதான் வாழ்ந்து வந்தார்கள். நேஹா வின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார்.
சண்டை வந்த போதெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அவர்களை சமாதானப்படுத்தி விட்டு செல்வார்கள். இப்படியே நாட்கள் உருண்டோட ஒரு கட்டத்தில் இவர்களது பிரச்சனை பெரும் பிரச்சினையாகி விட்டது.
நேஹாவின் கணவர் நேஹாவை விவாகரத்து செய்வதாக முடிவுக்கு வந்துவிட்டார். விவாகரத்துக்கான நோட்டீஸ் நீதிமன்றத்தில் அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில் நேஹா தன் கணவரை பிரிந்து வாழ மனமில்லாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே தன் கணவருக்கு "ஐ லவ் யூ" என குறுந்தகவல் அவரது மொபைலுக்கு அனுப்பிவிட்டு அவரது வீட்டின் 5ஆம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பாசமான மனைவி! ஆனால் அதைப் புரிந்து கொள்ளாத ஒரு கணவன்! இவர்களுக்கு உள்ளான கருத்து மோதல்தான் தற்போது இவர்களை நிரந்தரமாகப் பிரித்து விட்டது.
Tags
India News
