ஏப்ரல் 27 2023 இல் திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியான கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆண்டு விழாவை கொண்டாடினார்கள். இந்த ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் எ.வ வேலுவின் மகன் கம்பன் அவர்கள் வருகை புரிந்து விழாவை சிறப்பு செய்தார்கள்.
மேலும் எம்எல்ஏ உள்பட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
ஆண்டு விழாவையொட்டி அரசு கலைக் கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம் எல் ஏ மற்றும் எம்பிகள் பரிசினை வழங்கி வாழ்த்தினார்கள்.

