ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 169 வது படமான 'ஜெய்லர்' படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் தோல்வி நெல்சனை தமிழ் சினிமா வெறுக்க காரணமாயிற்று. தளபதி விஜய் வைத்து எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு பங்கமாக செய்திருந்தார் நெல்சன்.
" டாக்டர், கோலமாவு கோகிலா" போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தை ஏன் படத்தை ஏன் இப்படி எடுத்தார் என்று தெரியவில்லை.
ரஜினிகாந்த் ஐ வைத்து இயக்கும் 'ஜெய்லர்' படத்தையாவது சரியாக எடுப்பாரா? என்று எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தற்போது வந்த செய்தியின் படி ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் புஷ்பா பட வில்லன் சுனில் எங்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் ஒரு போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா படத்தில் சுனில் அவர்களின் வில்லத்தனத்தை பார்த்திருப்போம். நடிகர் சுனில் பல தெலுங்கு படங்களில் துணை நடிகர் மற்றும் நகைச்சுவை கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்லர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகர் சுனில் அவர்களின் கதாபாத்திரமும், பாடி லாங்குவேஜ்ஜும் வித்தியாசமாக இருக்கிறது என்பதை போல பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது.
