ஜெயம் ரவி நடிப்பில் போலீஸ் வேடங்களில் நடித்த திரைப்படங்கள் ஆகிய தனி ஒருவன் அடங்க மறு போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
மேலும் ஜெயம் ரவிக்கு அந்த திரைப்படங்கள் தான் அவரது கேரியர்லையே சிறந்த படங்களாக அமைந்தது.
போலீஸ் கெட்டப்பில் ஜெயம் ரவி சிறப்பாக நடிப்பார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்து வருகிறார்.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் திரைப்படம் 'சைரன்' இத்திரைப்படத்தில் அவர் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் காவல் துறை அதிகாரியாகவும், ஜெயம் ரவி ஜெயிலராகவும் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

