கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை என்கிற கிராமத்தை சேர்ந்தவர் சபின். இவர் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இரண்டு பேரும் தங்களது காதலை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக காதலித்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் காதலியின் உறவினர் வீட்டில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை கேள்விப்பட்ட காதலன் தனது காதலிக்கு தான் அவளது பெற்றோர்கள் ரகசியமாக திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டு மூக்கு முட்ட நன்றாக சாராயம் குடித்துவிட்டு கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வந்தான்.
கல்யாணத்துக்கு வந்து அங்கு காதலியின் பெற்றோரிடம் தனக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்துள்ளான்.
இந்த சம்பவத்தால் கல்யாண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலியின் பெற்றோர் தனது மகளை திருமணம் செய்கிறாய் என்று ஆவேசத்தில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.
