தமிழ்நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் மே 8 2023 இன்று காலை 10 மணியளவில் வெளியானது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் சென்று தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியான அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 600 க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல்லில் பாரதிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார்.அவரது மனைவி பாலப்பிரியா. இவர்களது மகள் நந்தினி அங்குள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து தமிழ், ஆங்கிலம்,பொருளாதாரம்,வணிகவியல், கணினி அறிவியல், கணக்கியல் என அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
