திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சாவடி தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 23) இவர் அத்திமூரிலிருந்து போளூர் செல்லும் சாலையில் போளூரில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது நீண்ட நேரமாக தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சிக்கும் போது எதிரே வந்த போளூரில் இருந்து ஜவ்வாது மலைக்கு செல்லும் அரசு வாகனமான (777 என்ற நம்பர் பதிந்த பஸ் ஒன்று விஜயகுமார் வந்த பைக்கை நேருக்கு நேராக பலமாக மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த விஜயகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் விபத்து ஏற்படுத்திய அரசு வாகனத்தை கைப்பற்றி போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.


🥺
ReplyDelete