மிகப்பெரிய விண்கற்கள் பூமியை நோக்கி வருகிறது பூமியில் மிகப்பெரிய பேரழிவு ஏற்படுத்தப் போகிறது என்று பல கட்டு கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இந்த நிலையில் நாசா விண்வெளி நிலையத்திலிருந்து திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்து மக்களை பீதி கிளப்பியுள்ளது.
என்னவென்றால் மூன்று கால்பந்து மைதானங்கள் அளவிலான ஒரு பெரிய விண்கல் ஒன்று ஏப்ரல் 26 தேதியில் பூமியை கடக்க போவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அந்த விண்கலமானது 62,723 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. அந்த விண்கலத்திற்கு 2006Hv5 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விண்கல் ஆனது ஒரு அதிசயமானது என்றும் இது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும் என்று கூறப்படுகிறது.
"இந்த முறை விண்கல் வந்துவிட்டால் அடுத்து 100 ஆண்டுகளுக்கு திரும்பவும் விண்கல் வருவதற்கு வாய்ப்பே இல்லை " என்று கூறுகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.
