.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' தீபாவளிக்கு ரிலீசாகிறது!

 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் என்கிற படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே ரிலீஸ் ஆகி இணையதளத்தை கலக்கியது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிதாக அயலான் என்கிற படம் தீபாவளிக்கு ரிலீசாக போவதாக நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (24 ஏப்ரல் 2023) அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இதனை அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்கள். அவர்களது உற்சாகத்தை மேலும் குதூகலப்படுத்துவதற்காக அயலான் படத்திலிருந்து Glimpse வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் R ரவிக்குமார் தான் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தையும் இயக்குகிறார்.

அயலான் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் அயலான் படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் மற்றும் பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

'இன்று நேற்று நாளை' என்கிற படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அது ஒரு டைம் ட்ராவல் படம் என்று.

தமிழ் சினிமாவில் வந்த முதல் டைம் ட்ராவல் படம் 'இன்று நேற்று நாளை' படம் தான்.

இன்று தமிழ் சினிமாவில் எத்தனையோ டைம் டிராவல் படங்கள் வந்தாலும் இது எல்லாத்துக்குமே முன்னோடி 'இன்று நேற்று நாளை' படம் தான். 'இன்று நேற்று நாளை' படம் வந்ததற்கு பிறகு தான் இப்ப எல்லாருமே டைம் ட்ராவல் படம் எடுக்குறாங்க.

(சந்தேகமா இருந்தால் நீங்க வேனா கூகுள்ல போய் சரி பாருங்க.😇)

அந்த படத்தின் இயக்குனர் தான் இந்த படத்தையும் எடுக்கப் போவதால் கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்பலாம்.

மேலும் இதுவரை சிவகார்த்திகேயன் நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் இந்த படத்தில் இருக்கிறது. ஏலியன்கள் காட்டப்பட்டுள்ளது. இந்த Glimpse வீடியோ பார்த்தவுடன் அனைத்து ரசிகர்களுக்கும் எப்போ படம் ரிலீஸ் ஆகும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال