பொலிவியாவைச் சேர்ந்த போனடன் அகோஸ்டா என்பவர் அமேசான் காட்டில் தொலைந்து போனார்.
இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, தனது நண்பர்களுடன் அமேசான் மழைக்காடுகளுக்கு வேட்டையாடச் சென்றார். தொலைந்து போய் அங்கே தனியே சிக்கிக் கொண்டார்.
அவர் சுமார் 30 நாட்கள் காட்டில் வாழ்ந்ததாகவும், உணவின்றி தவித்து பின்னர் பூச்சிகளை உணவாக சாப்பிட்டதாகவும் கூறுகிறார்.
தண்ணீர் கிடைக்காமல் தனது சிறுநீரை தானே குடித்ததாகவும் அகோஸ்டா கூறினார்.
இந்த நிலையில் மீட்பு குழுவினர் 31 நாட்களுக்கு பிறகு தான் அவரை கண்டுபிடித்தனர்.
ஒரு மாதம் சரியான சாப்பாடு தண்ணீர் இல்லாமல் முன்பிருந்த உடல் எடையில் இருந்து ஒரு மாதத்தில் 17 கிலோ எடையை இழந்து மெலிந்த தேகத்துடன் காப்பாற்றப்பட்டார்.
இவர் உயிர் பிழைத்து வந்ததே ஆச்சர்யம் தான் என்று கூறுகிறார்கள் டாக்டர்கள்.
