நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் சிறிது காலம் தான் இருந்தார். ஆனால் முழுமையாக இயற்கை விவசாயம் என்ற கொள்கைக்கு மாறிவிட்டார் போல.
எல்லாரும் பிறந்த நாளுக்கு விதவிதமான கேக்குகளை வெட்டி கொண்டாடும்போது நடிகர் மன்சூர் அலிகான் மட்டும் வித்தியாசமான முறையில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அப்படி என்ன செய்தார் என்று கேட்டீர்கள் என்றால் பலாப்பழம், திராட்சை ,மாதுளை பழம் ஆரஞ்சு போன்ற இயற்கையான பழங்களை கும்பலாக வைத்து அதை வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
தற்போது தளபதி விஜய்யின் "லியோ" ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மன்சூர் அலிகான் தனது பிறந்த நாளை பலாப்பழம் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
"இந்த மனுஷன் எது பண்ணாலும் ஒரு தினுசா தான் பண்றாருப்பா "அப்படின்னு பார்ப்பவரை இயக்க வைக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகானின் யாருக்கும் பயப்படாத பேச்சு மற்றும் எதார்த்தமான பழக்க வழக்கங்களால் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட மன்சூர் அலிகானின் தீவிர ரசிகராகவே மாறிவிட்டார்.
