பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் சைஸ்மோர் காலமானார். அவருக்கு வயது 61. கடந்த சில நாட்களாக மூளை நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 05 மார்ச் 2023 ஆன இன்று தீடீரென உயிரிழந்தார்.
இவர் சேவிங் பிரைவேட் ரயன், எனிமி ஆஃப்தி ஸ்டேட், பியர்ல் ஹார்பர், பிளாக் ஹாக் டவுன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படங்களில் எல்லாம் இவரது நடிப்பே பயங்கரமாக பேசப்பட்டது.
2003ம் ஆண்டு இவர், வன்முறையில் ஈடுபட்டதாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தவர்.
மேலும் இவருக்கு போதைப் பழக்கமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags
Cinema
