பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் 'பதான்'. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகியுள்ளார்.
இப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி புதிய சாதனை படைத்தது. தற்போது பாகுபலி-2 படத்தின் சாதனையை முறியடித்தது.
ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம், சமீபத்தில் இந்தியாவில் ரூ. 510.99 கோடி வசூலித்துள்ளது. இது பாகுபலி-2 (இந்தி)யை மிஞ்சிய வசூல் ஆகும்.
படத்தின் ஒட்டுமொத்த வசூலை யாஷ் ராஜ் பிலிம்ஸ் பகிர்ந்துள்ளது. பதான் இந்தியாவில் ரூ.640 கோடியும், வெளிநாடுகளில் ரூ.386 கோடியும் சேர்த்து ரூ.1026 கோடி சம்பாதித்துள்ளது.
Tags
Cinema
