நட்சத்திர நாயகி சமந்தா திரையுலகில் மட்டுமின்றி இன்ஸ்டாவிலும் சம்பாதித்து வருகிறார். சினிமா மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் சமந்தா.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு 24.8 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதாவது 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.
நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு மட்டும் சம்பளம் வாங்காமல் அவரது சமூக ஊடக விளம்பரங்கள் மூலம், அவர் ரூ. 3 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஸ்டாகிராமில் விளம்பரப் பதிவுகளுக்கு சுமார் ரூ.20 லட்சம் வாங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சில விளம்பர படங்களிலும் சமந்தா நடித்து வருகிறார். சமீபத்தில் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார் சமந்தா.
