.

திருவண்ணாமலை ATMஐ ஓட்டை போட்டு 70 லட்சம் கொள்ளையடித்த திருடர்களின் தடயங்கள் கிடைத்துள்ளதது!

 ஏடிஎம் மையங்களை உடைத்து70 லட்சத்திற்கு மேல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வடமாநிலங்களில் நடப்பது போல் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது. 

இந்த சம்பவத்தால்  வேலூர் சரக டிஐஜி தலைமையில் 5 மாவட்ட எஸ்பி விசாரணையை தொடங்கியுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மணலூர்பேட்டைசாலை 10வது மாரியம்மன் கோவில் தெருவில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் வங்கி கிளை, தேனிமலை பகுதியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை, போளூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் வங்கி அதே போல் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒன் இந்தியா ஏடிஎம் வங்கி ஆகிய மூன்று ஏடிஎம் மையங்களும் மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகம் உள்ள பகுதியாகவும், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் 4 ஏடிஎம் மையங்களின் இயந்திரத்தை உடைத்து 70 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

 கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றதால் 4 ஏடிஎம் இயந்திரங்களும் எரிந்து சேகம் அடைந்துள்ளது.

அதிகாலையில் வங்கி ஏடிஎம்மில் இருந்து கரும்புகை வெளியேறியதால் இது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னரே ஏடிஎம் கொள்ளை நடைபெற்றது தெரியவந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் ஒன் இந்தியா வங்கி கிளையானது 30 கிலோமீட்டர் தூரத்திலும் அதே போல போளூர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஆனது 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில் ஒரே நபர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது பல்வோறு குழுக்கள் மூலம் இந்த சம்பவமானது நடைபெற்றதா என்றும் விசாரனை நடத்தி வருகின்றனர்.

அதே போல் கொள்ளையடிக்கப்பட்ட தெருவில் உள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை கொண்டு அந்த பகுதியில் நள்ளிரவில் நடமாடிய நபர்கள் குறித்தும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

 இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில்: இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேறிய நபர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

 இதுபோன்ற ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துக் கொள்ளையடிக்கும் சம்பவம் வட மாநிலங்களான அரியானா ஒரிசா ஆந்திரா ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தற்போது தமிழகத்தில் இதுபோன்று கொலை சம்பவம் முதல் முறை நடைபெற்றுள்ள நிலையில் தனிப்படையினர் ஆந்திரா மற்றும் வடமாநில பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர்.

 இதுபோன்று கொள்ளை சம்பவங்களில் கைதேர்ந்த குழு ஈடுபட்டு இருப்பதாகவும் ஏடிஎம் இயந்திரங்கள் குறித்த செயல்பாடு அறிந்த நபர்களால் மட்டுமே இதனை நடத்த முடியும் என்றும் குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் மண்டல டிஐஜி தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post

نموذج الاتصال