தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் நடிப்பில் இந்த வருடம் பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கும் திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு.
இந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள நிலையில், வரும் 13 ,14 ,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாரிசு ,துணிவு திரைப்படங்களுக்கு காலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
