கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டையில் ஹோட்டலில் ரப்பர் இட்லி போட்டதாக கூறி உரிமையாளர்களிடம் வாக்குவாதம் செய்த வாடிக்கையாளர்களால் பரப்பரப்பு ஏற்பட்டது.
இங்கு வழங்கப்படும் இட்லி ரப்பர் போல உள்ளதாகவும், 3 நாட்களுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது, குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
வேறு இடத்திலிருந்து இட்லி குறைந்த விலைக்கு வருவதாகவும், அதனை தாங்கள் சட்னி, சாம்பாரோடு விற்பனை செய்து வருகிறோம், இந்த இட்லியில் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுகிறது என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags
Tamilnadu News

