இரண்டாம் நந்திவர்மனின் மகன் இவன். (வைரமோகன்) எனவும் அழைக்கப்பட்டான் இராட்டிரக்கூடத்துத் தந்திதுர்க்கன் மகளான ரேவாவின் மகன். தன் பாட்டன் பெயரை அடிப்படையாகக் கொண்டு தந்திவர்மன் என அழைக்கப்பட்டான். கதம்பக் குலப் பெண்ணான அக்களநிம்மதி என்பவளை மணந்து கொண்டாள்.இராட்டிர கூட நாட்டில் முதலாம் கிருஷ்ணனுக்குப் பின் இரண்டாம் கோவிந்தன்.
துருவன் ஆகிய இருவருக்கிடையே அரியணைப் போட்டி நடந்தது. இதில் இரண்டாம் கோவிந்தனை தந்திவர்மன் ஆதரித்தான். அதனால் வெற்றிபெற்ற துருவனின் சீற்றத்துக்குத் தந்திவர்மன் ஆளானான். எனவே, நுருவனுடைய காஞ்சிப் படையெடுப்பில் அவனிடம் தோற்று கப்பம் கட்ட ஒத்துக் கொண்டான்,பின்பு துருவளின் மக்கள் அரியணைப் போட்டியில் ஈடுபட்டனர். மூன்றாம் கோவிந்தனுக்கும் மூத்த மகனான கம்பராசனுக்கும் போர் மூண்டது. அவள் பல்லவ நந்திவர்மனோடு போர் தொடுத்தான். தந்திவர்மன் இராட்டிர கூடனிடம் தோற்றுக் கப்பம் கட்டினான்.
தந்திவர்மன் ‘மாற்பீடுரு’ என்னும் தன் பட்டப் பெயரிளடியாகத் திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் ஆயம்பாக்கம் என்னும் ஊருக்கு அருகில் மாற்பிடுகு ஏரியை வெட்டுவித்தான் வைரமோகள் வாய்க்கால் அவன் காலத்தில் வெட்டப்பட்டது.சிறந்த வைணவனாக விளங்கிய போதிலும் இவன் கயிலாசநாதர் கோயில் ஒன்றினைக் கட்டியதோடு சைவ, வைணவக் கோயில்களுக்கு நிரம்பப் பொருள் அளித்தான். திருமங்கையாழ்வார் இவன் காலத்தவர் என்பர். நந்திவர்மன் காலத்து மன்னர்கள் கங்க நாட்டு இரண்டாம் சிலமாறன், முதலாம் இராசமல்லன்.
இராட்டிரக்கூட இரண்டாம் கோவிந்தன்,மன்னர் பாண்டிய மன்னர் நெடுஞ்சடையன் பராந்தகள். இரண்டாம் இராசசிம்மன், வரகுண மகாராசன் {சடிலபரர்த்தக நெடுஞ்சடையன்) ஆகியோராவர் )
