இரண்யவர்மன் என்ற சிறந்த வீரனுக்கு மகள் தான் இப்பல்லல மல்லன் தாணிகொண்ட போசர் முதலிய அரசியல் தலைவர்களின் வேண்டுதலை ஏற்று தந்திவர்மன் என்ற அபிடேகப் பெயருடன் பல்லவ அரசனாயினான். ஏறத்தாழப் பன்னீரண்டாம் வயதில் பட்டம் பெற்ற இம் மன்னன் 85 ஆண்டுகள் ஆண்டான்.
என்பது இவனுடைய 65-ஆம் ஆட்சியாண்டில் வந்துள்ள மாமல்லபுரக் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. இவனுக்கு உரிய வயது வரும்வரை இவன் தந்தையாகிய இரண்யவர்மன் பல்லவ நாட்டைப் பாதுகாத்தான்.
இவனுடைய 21-ஆம் ஆட்சியாண்டில் வெளிவந்த உதயேந்திரப் பட்டயம். 22 ஆம் ஆட்சியாண்டில் வெளிவந்த காசக்குடிப் பட்டயம், 58 ஆம் ஆட்சியாண்டில் வெளிவந்த தண்டன் தோட்டப் பட்டயம்.
61-ஆம் ஆட்சியாண்டில் வெளிவந்த கொற்றங்குடி பட்டயம், 65-ஆம் ஆண்டில் வெளிவந்த மாமல்லபுரத்துக் கல் வெட்டு ஆகியனவும், அவை தவிர சாளுக்கியருடைய கைலாசநாதர் கோயிலில் உள்ள இரண்டாம் விக்கிரமாதித்தனது கல்வெட்டு, இரண்டாம் கீர்த்தி வர்மன் வெளியிடட வக்கலேரிப்பட்டயம், கேந்தூர்ப் பட்டயம், சிள்ள மனூர்ப் பட்டயம், கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள், வைகுந்தப் பெருமாள் கோயிலில் உள்ள சிற்பங்கள், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாடல்கள் ஆகியளவும் இவள் காலத்துக்கு உரிய சான்றுகளாக உதவுகின்றன)
பாண்டிய மன்னனான அரிகேசரி பராங்குச மாறவர்மன், கொங்கு நாட்டுரிமை காரணமாகவும், சித்திரமாயன் என்பவனைப் பல்லவ மன்னனாக்கவும் பல்லல மன்னன் மீது படையெடுத்தான். நந்திபுரக் கோட்டையில் நந்திவர்மன் தங்கியிருந்த போது பாண்டியன் முற்றுகையிட்டான்,
பூசான் மரபை சேர்ந்தவனும் படைத்தலைவனும் ஆன உதயசந்திரன் பெரும் படையுடன் வந்து பாண்டியரின் முற்றுகையினை நீக்கியதோடு நிகம்பவனம் என்ற இடத்தில் போரிட்டுப் பாண்டியரைத் தோற்கடித்தான். இரண்டாம் விக்கிரமாதித்தன் என்னும் சாளுக்கிய மன்னன் பல்லவனைத் துரத்திக் காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினான்.
(‘பின்பு முற்றுகை நீக்கிய இரண்டாம் தந்திவர்மன் விக்கிரமாதித்தனை வென்றாள். மீண்டும் காஞ்சியைக் கைப்பற்றினாள். உதயசந்திரன் எனும் படைத்தலைவன் உதவியோடு பல்லவ நாட்டை விட்டுச் சாளுக்கியரை விரட்டினான்.)
இராட்டிரகூட மன்னனான வைரமோகன் என அழைக்கப்பட்டவன், தந்தி துர்க்கன். அவள் நட்பைப் பெற்று அவன் மகள் ரேவா என்பவளை மணந்தான். இவர்களுக்கு பிறந்தவனே நந்திவர்மன் எனப்படும் பல்லவமன்னன்.
சிறந்த வைணவனாக விளங்கிய இம்மன்னன் நாட்டின் கல்வி நிலை, சமயநிலை ஆகியவற்றைச் செழிப்புறச் செய்தான். இவன் காலத்து மன்னர் சாளுக்கிய இரண்டாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் கீர்த்தி வர்மன், கங்க அரசன் ஸ்ரீ புருடன், இராட்டிரகூடத் தந்தி துர்க்கள், முதலாம் கிருஷ்ணன், இரண்டாம் கோவிந்தன் பாண்டிய மன்னர் முதலாம் இராசசிம்மன் எனப்பட்ட பராங்குச மாறவர்மன், நெடுஞ்சடையன் பராந்தகன் ஆகியோராவர்.
