.

தாவர வழிமுறை வளர்ச்சியின்‌ வகைகள்‌- தினச்சுவடி

தாவர வழிமுறை வளர்ச்சியின்‌ வகைகள்‌ :

நீர்நிலை வழிமுறை வளர்ச்சி மற்றும்‌ பாறை வழிமுறை வளர்ச்சி விரிவாக கீழே விவாதிக்கப்பட்ருள்ளது. நீர்நிலை வழிமுறை வளர்ச்சி ஒரு நன்னீர்‌ சூழல்மண்டலத்தில்‌ நடைப்பெறும்‌ வழிமுறை வளர்ச்சி நீர்நிலை வழிமுறை வளர்ச்சிஎன குறிப்பிடப்பருகிறது.

தாவர வழிமுறை வளர்ச்சியின்‌ வகைகள்‌


குளச்‌ சூழல்மண்டலம்‌ ஒன்றின்‌ வழிமுறை வளர்ச்சி முன்னோடித்‌ தாவரங்களான மிதவை உயிரிகளின்‌ குடியேற்றத்தில்‌ தொடங்கி இறுதியாக உச்சக்‌ குழுமம்‌ வற்ற காரு நிலை தோன்றுவதில்‌ முடிவடைகிறது. இது கீழ்கண்ட நிலைகளைக்‌ கொண்ருள்ளது.

1. தாவர மிதவை உயிரிநிலை ( Phytoplakton Stage )

நீலப்பசும்பாசிகள்‌, பாக்டீரியங்கள்‌, சயனோபாக்டீரியங்கள்‌, பசும்பாசிகள்‌, டயட்டம்‌, போன்ற முன்னோடி குழுமங்களைக்‌ கொண்ட வழிமுறைவளர்ச்சியின்‌ முதல்நிலை இதுவாகும்‌.

இந்த உயிரினங்களின்‌ குடிவயர்வு, வாழ்க்கை செயல்முறைகள்‌, இறப்பின்‌ மூலமாக குளத்தின்‌ கரிம பொருளின்‌ அளவு மற்றும்‌ ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின்‌ அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதையும் படிக்க : நந்திவர்மன்வாழ்க்கை வரலாறு பற்றி தெரியுமா ?

2. நீருள்‌ மூழ்கிய தாவர நிலை (Submerged plant )

மிதவை உயிரிகளின்‌ இறப்பு மற்றும்‌ மட்குதலின்‌ விளைவாலும்‌, மழைநீர்‌ மூலம்‌ நிலத்திலிருந்து மண்‌ துகள்கள்‌ அடித்து வரப்பருவதாலும்‌, குளத்தின்‌ அடிப்பகுதியில்‌ ஒரு தளர்வான மண்‌ உருவாக வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள்‌ மூழ்கி வாழும்‌ நீர்வாழ்த்‌ தாவரங்கள்‌ புதிய வாழ்தளத்தில்‌ தோன்ற ஆரம்பிக்கிறது.

எடுத்துக்காட்டுகள்‌: கேரா, யூட்ரிகுலேரியா,

வாலிஸ்நேரியா, ஹைட்ரில்லா முதலியன. இந்ததாவரங்களின்‌ இறப்பு மற்றும்‌ சிதைவு குளத்தின்‌ அடித்தளத்தை உயர்த்துவதால்‌ குளம்‌ ஆழற்றமற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம்‌ நீருள்‌ மூழ்கி மிதக்கும்‌ நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள்‌ குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.

3. நீருள்‌ மூழ்கிமிதக்கும்‌ நிலை

இந்த நிலையில்‌ குளத்தின்‌ ஆழம்‌ கிட்டத்தட்ட 2- 5 அடியாக இருக்கும்‌. எனவே, வேரூன்றிய நீர்வாழ்த்‌ தாவரங்கள்‌ மற்றும்‌ வரிய இலைகளுடன்‌ கூடிய மிதக்கும்‌ தாவரங்கள்‌ குளத்தில்‌ குடியேற ஆரம்பிக்கின்றன.

எடுத்துக்காட்டாக வேரூன்றிய மிதக்கும்‌ தாவரங்களான தாமரை, அல்லி மற்றும்‌ ட்ராபா; மிதக்கும்‌ தாவரங்களான அசோலா, எலம்னா,உல்‌ஃபியா. பிஸ்டியா போன்றவை இந்த நிலையில்‌ உள்ளன. இந்த தாவரங்களின்‌ இறப்பு மற்றும்‌ சிதைத்தல்‌ மூலம்‌ குளத்தின்‌ ஆழம்‌ மேலும்‌ குறைகிறது. இதன்‌ காரணமாக மிதக்கும்‌ தாவரங்கள்‌ படிப்படியாக பிற இனங்களால்‌ மாற்றி அமைக்கப்பருவதால்‌ புதிய நிலை ஒன்று உருவாகிறது.

4. நாணற்‌ சதுப்பு நிலை (Reed-swamp stage)

நீர்‌-நில வாழ்நிலை எனவும்‌ அழைக்கப்பருகின்றது. இந்த நிலையில்‌ வேரூன்றிய மிதக்கும்‌ தாவரங்கள்‌ பிற தாவரங்களால்‌ மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர்கூழ்நிலையிலும்‌, நில சூழ்நிலையிலும்‌ வெற்றிகரமாக வாழக்கூடியது.

எடுத்துக்காட்டாக டைஃபா, பிராக்மிட்டிஸ்‌, சேஜிட்டேரியா மற்றும்‌ ஸ்கிர்ப்பஸ்‌ முதலியன. இந்த நிலையின்‌ இறுதியில்‌ நீரின்‌ அளவு மிகவும்‌ குறைவதோடு, நீர்‌-நில வாழ்த்‌ தாவரங்களின்‌ தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தகுதியற்றதாகிறது.

5) சதுப்பு புல்‌வெளி நிலை

நீரின்‌ அளவு குறைவதால்‌, குளத்தின்‌ ஆழம்‌ குறையும்வாழுது சைப்பரேசி மற்றும்‌ போயேசி சிற்றினங்களான கேஎக்ஸ்‌, ஜன்கஸ்‌, சைஸ்‌. எலியோகேரிஸ்‌ போன்றவை அப்பகுதியில்‌ குடியேறுகின்றன. இவற்றின்‌ அதிகம்‌ கிளைத்த வேர்களின்‌ உதவியால்‌ பாய்‌ விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது.

இது அதிக அளவு நீர்‌ உறிஞ்சுவதற்கும்‌, நீர்‌ இழப்பிற்கும்‌ வழி வகுக்கிறது. இந்த நிலையின்‌ முடிவில்‌ மண்‌ வறண்டு,சதுப்புநிலத்‌ தாவரங்கள்‌ படிப்படியாக மறைந்து புதர்ச்‌செடிகள்‌ குடிபுக வழிவகுக்கிறது.

6. புதர்ச்செடி நிலை

சதுப்பு நிலத்‌ தாவரங்கள்‌ தொடர்ந்து மறைவதால்‌, மண்‌ வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில்‌ நிலவாழ்த்‌ தாவரங்களான புதர்ச்சசெடிகள்‌ (சாலிக்ஸ்‌ மற்றும்‌ கார்னஸ்‌) மற்றும்‌ மரங்கள்‌ (பாப்புலஸ்‌ மற்றும்‌ அல்னஸ்‌) ஆகியவை படையருக்கின்றன.

இந்த தாவரங்கள்‌ அதிக அளவிலான நீரை உறிஞ்சி, வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன்‌ செழுமையான நுண்ணுயிரிகளுடன்‌ கூடிய கரிம மட்கு சேகரமடைவதால்‌ மண்ணில்‌ கனிமவளம்‌ அதிகரிக்கிறது. இறுதியில்‌ அப்பகுதி புதிய மர இனங்களின்‌ வருகைக்கு சாதகமாகிறது.

7.காடுநிலை

நீர்வழிமுறை வளர்ச்சியின்‌ உச்சநிலை குழுமம்‌ இதுவாகும்‌. இந்த நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள்‌ படையெடுப்பதோடு ஏதாவதுஒருவகையானதாவரத்ஷாகுப்பு உருவாகிறது.

எடுத்துக்காட்டு: குளிர்‌ மண்டலக்‌ கலப்புக்காரு (அல்மஸ்‌,எச்‌, குர்கஸ்‌) வெப்பமண்டல மழைக்காடுகள்‌ (ஆர்டோக்காற்பஸ்‌, சின்னமோமம்‌) வெப்பமண்டல இலையுதிர்க்‌ காருகள்‌ (மூங்கில்‌, தேக்கு) முதலியன.

நீர்நிலை வழிமுறை வளர்ச்சியின்‌ இந்த ஏழு நிலைகளில்‌, நிலை 1 முன்னோடி குழுமத்தினால்‌ ஆக்கிரமிக்கப்படுகிறது, நிலை 7 உச்சநிலை குழுமத்தினால்‌ ஆக்கிரமிக்கப்பருகிறது. 2 முதல்‌ 6 வரையிலான நிலைகள்‌ படிநிலை எதாடரிக்‌ குழுமங்களால்‌ ஆக்கிரமிக்கப்பருகின்றன.

தாவர வழிமுறை வளர்ச்சியின்‌ முக்கியத்துவம்‌

இது இயக்கநிலையில்‌ உள்ள ஒரு செயல்முறையாகும்‌. எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியில்‌ காணப்படும்‌ ஒரு தாவர குழுமத்தை பற்றி சுற்றுச்சூழலியலார்‌ தீர்மானிக்கவும்‌, படிநிலை தொடரிக்‌ குழுமங்களை படித்தறியவும்‌ ஏதுவாகிறது.

சுற்றுச்சூழல்‌ சார்‌ வழிமுறை வளர்ச்சி பற்றிய அறிவு,காடுகளில்‌ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டசிற்றினங்களின்‌ கட்டுப்பாட்டான வளர்ச்சியைப்‌ புரிந்து கொள்ள உதவுகிறது.

  • வழிமுறை வளர்ச்சி பற்றிய அறிவை பயன்படுத்துவதன்‌ மூலம்‌, வண்டல்‌ படிவிலிருந்து அணைகளை பாதுகாக்கலாம்‌.
  • காடுகளை மீட்டெடுத்தல்‌, புதிய காடுகளை பற்றிய தகவல்களை இது வழங்குகிறது.
  • மேய்ச்சல்‌ நிலங்களின்‌ பராமரிப்புக்கு இது உதவுகிறது.
  • உயிரினங்களின்‌ உயிரிபன்மத்தை ஒரு சூழல்மண்டலத்தில்‌ பராமரிக்க இது உதவுகிறது.
  • வள ஆதாரம்‌ கிடைக்கும்‌ அளவு மற்றும்‌ பல்வேறு காரணிகளின்‌ இடையூறுகளால்‌ வழிமுறை
Previous Post Next Post

نموذج الاتصال