.

கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை என்றால் என்ன? வெள்ளெழுத்து, கண்புரை விளக்குக.

 மையோப்பியா - கிட்டப்பார்வை (Myopia)

இதனால் பாதிப்படைந்த நபரால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியும். தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாகக் காண நீண்டிருப்பதாலும் விழிலென்ஸ் அதிகமாகத் தடிப்புற்றிருப்பதாலும் தொலைவில் உள்ளமுடிவதில்லை. 

கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை என்றால் என்ன? வெள்ளெழுத்து, கண்புரை
கண் குறைபாடு நோய்கள்

கண்கோளம் பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மஞ்சள் பகுதிக்கு (Fovea) முன்பாகக் குவிக்கப்படுகிறது. அதனால் பார்வை தெளிவற்றுக் காணப்படுகிறது.

 இக்குறைபாட்டை நீக்க குழிலென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இது தொலை பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை விரித்துப் பின் விழித்திரையில் விழச்செய்கிறது. 

  ஹைப்பர் மெட்ரோப்பியா -   தூரப்பார்வை ( Hypermetropia) 

இதனால் பாதிப்படைந்த நபரால் தொலைவில் உள்ள பொருள்களை தெளிவாக காண முடியும். அருகில் உள்ள பொருள்களை தெளிவாக காண இயலாது.

சுருக்கமடைந்திருப்பதாலும் விழிலென்ஸ்
மெலிந்திருப்பதாலும் அருகில் உள்ள
பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கும் பின்னால் குவிக்கப்படுகிறது.

அதனால் பார்வை தெளிவற்றுக் காணப்படுகிறது. இக்குறைபாட்டை நீக்கக் குவிலென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அது அருகில் உள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்களைக் குவித்து விழித்திரையில் விழச்செய்கிறது. 

 பிரஸ்பையோபியா- வெள்ளெழுத்து (Presbyopia)

வயதான கண் லென்சுகள் மீள் தன்மையையும் விழி தகவமைதலையும் இழப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. இதைச் சரி செய்யக் குவிலென்ஸ் பயன்படுகிறது.

 அஸ்டிக்மாடிசம் (Astigmatism)

இது ஒழுங்கற்ற வளைவுப்பரப்பைக் கொண்ட
கார்னியா மற்றும் லென்சுகளால் ஏற்படுகிறது. உருளை வடிவக் கண்ணாடிகளை (cylindrical glasses) பயன்படுத்தி இக்குறைபாட்டை நீக்கலாம். 

   கண்புரை (Cataract)

விழிலென்சில் உள்ள புரதங்களில் ஏற்படும் மாற்றத்தால் லென்சானது ஒளி ஊடுருவும் தன்மையை இழந்து இந்நிலை ஏற்படுகிறது. அறுவை  சிகிச்சை மூலம் இக்குறைபாடு நீக்கப்படுகிறது. 
Previous Post Next Post

نموذج الاتصال