சீக்கிய மதத்தை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவித்தவர் குருநானக். சிறு வயதிலேயே இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மதம் ஆகியவற்றைப் பற்றி நிறைய படித்தறிந்தவர். தீண்டாமையை ஒழிக்க அந்தக் கால கட்டத்திலேயே முயற்சிகளை மேற்கொண்ட சீர்திருத்தவாதி.
பாகிஸ்தானில் ராய் போய் தி தலவண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் குருநானக். பிரிவினைக்குப் பிறகு அந்தக் கிராமத்தின் பெயர் நன்கானா சாஹேப் என்று மாற்றப்பட்டுவிட்டது.
இவரது மூத்த சகோதரி பீபீ நானாகி. அவர் மீது இவருக்குப் பிரியம் மிக அதிகம். லாகூரில் திருமணமாகி மாப்பிள்ளை வீட்டோடு அவர் போனதும், அந்தப் பிரிவை குருநானக்கால் தாங்க இயலவில்லை.
அங்கிருக்கும் அரண்மனையிலேயே வேலையைத் தேடிக்கொண்டு அக்காவோடயே இருந்திருக்கிறார். அத்தனை பாசம் இந்தனைக்கும் அப்போது அவருக்கு வயது 16.
அப்போது இவரது பெயர் வெறும் நானக் மட்டுமே. குரு என்பது பின்னால் அனைவராலும் இவர் தெய்வத்துக்கு நிகராக போற்றப்பட்ட போது ஒட்டிக் கொண்ட கவுரவ அடை மொழி 19 வயதில் திருமணம் ஆயிற்று. இரண்டு ஆண் குழத்தைகளுக்குத் தந்தையாகவும் ஆனார்
குருநாளக்கிற்கு வயது 30 இருக்கலாம். ஒரு நாள் வெளியே போனவர் வீடு திரும்பவில்லை ஊரெல்லாம் தேடினார்கள். அங்குள்ள ஆற்றங்கரையில் அவரது உடைகள் மட்டும் கண்டெடுக்கப்பட்டதால், தண்ணீரில் மூழ்கிவிட்டதாகத் தீர்மானித்தனர். ஆற்றில் மூழ்கி எங்காவது அவரது உடல் கிடைக்கிறதா என்றும் தேடிப் பார்த்தன
மூன்று நாட்கள் கடந்த பின்னர், திடீரென்று வீட்டிற்கு வந்து சேர்ந்தார் குருநானக் அன்று முழுவதும் யாரிடமும் பேசாமல் மெளன விரதம் பூண்ட அவர், மறுநாள்தான் மெளனம் கலைத்தார்
"உண்மையான கடவுள் இந்துவும் கிடையாது. முஸ்லீமும் கிடையாது. எனவே நான் இந்துக்களோ அல்லது இஸ்லாமியர்களோ பின்பற்றும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கப்போவதில்லை. உண்மையான கடவுள் வழியில் நடக்கப்போகிறேன். ஏனென்றால் கடந்த மூன்று நாட்களும் நான் கடவுளிடம் சென்றேன்.
என்னை குருவாக இருக்குமாறு ஆசிர்வதித்து என்னை அனுப்பி வைத்தார். எனவே நான் புதிய மதத்தைத் தோற்றுவிக்கிதேன். விருப்பமுள்ள வர்கள், என்னிடம் நம்பிக்கை வைக்கிறவர்கள் இந்த மதத்தில் வந்து இணையலாம்" என்று கூறினா பலபேர் இதனைப் பரிகசித்தனர். சிலபேர் அவரது புதிய சீக்கிய மதத்தில் இணைந்தனர்
குருநானக் மிகவும் புத்திசாலியாகவும், கூர்மையான அறிவு படைத்தவராகவும் விளங்கினார். ஒருமுறை அவர் இஸ்லாமியர்களில் புனிதத் தலமான மெக்கா சென்றிருந்தார். அப்போது அவர் காஃபாவை நோக்கிக் கால்களை நீட்டியவாறு படுத்திருந்தார்.
இதனைப் பார்த்துக் கோயமடைந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர், கடவுள் இருக்கும் திசையை நோக்கி இவ்வாறு மரியாதை இல்லாமல் இருக்கலாமா?“ என்று கண்டித்திருக்கிறார்.
இதைக்கேட்ட குருநானக், ""தவறுக்கு மன்னிக்கவும் கடவுள் இல்லாத திசையைக் காட்டுங்கள். அந்தப் பக்கமாகக் காலை நீட்டிப் படுத்துக் கொள் கிறேன்” என்றார். இதைக்கேட்ட மதகுரு நிகைத்துப் போய்விட்டார்.
ஒருமுறை குருநானக் தனது டேர்களுடன் மாலை வேளையில் கிராமம் ஒன்றிற்குப் போவார். நல்ல குளிராக இருந்ததால், தனது சீடர்களுடன், குளிருக்குப் போர்த்திக் கொள்ளப் போர்வை மற்றும் உணவு தருமாறு வீடுவீடாகப் போய்க் கதவைத் தட்டிக் கேட்டார்.
ஆனால் யாருமே இவர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். எனவே குளிரிலேயே பசியோடு அவர்கள் தவித்தனர்.
மறுநாள் அந்தக் கிராமத்தை விட்டுக் கிளம்பும்போது அந்த கிராம மக்களுக்காக அவர் பிரார்த்தித்தார் "ஆண்டவரே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்கிறேன்."
இதைப் பார்ந்த அவரது சீடர்கள், 'மனிதாபிமானமே இல்லாத இந்த மக்களுக்காக இப்படிப் பிரார்த்தனைச் செய்கிறாரே!' என்று வருந்தினர் ஆனால் அதைப் பற்றிக் குருநானக்கிடம் கேட்க எல்லோரும் தயங்கி, பேசாமல் இருந்துவிட்டனர்.
பின்னர் அன்று மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அங்கும் கடுங்குளிர் இருந்தது. பசி வேறு அனையின் வயிற்றையும கிள்ளியது.
இந்த ஊரில் என்ன கதியாகப் போகிறோமோ என்று அவரது சீடர்கள் அவர்களுடன் நினைத்துக் கொண்டனர்.
ஆனால் அங்கு நிலைமை தலைகீழாக இருந்தது. அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு குருநாவுக்கையும், அவரது சீடர்களையும் அன்புடன் உபசரித்தனர். அவர்களுக்குப் போர்த்திக்கொள்ளப் போர்வைகள், நல்ல சாப்பாடு என்று வழங்கி மக்கள் அசத்தினர். இது சீடர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.
மறுநாள் அவர்கள் அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு குருநானக் அந்த மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.
''ஆண்டவசே! இந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டு மூலைக்கொரு திசையாகப் பிரித்துப்போய் வழ அருள்புரியுமாறு வேண்டிக் கொள்கிறேன்"
இந்த பிரார்த்தனைவைக் கேட்டதும் அவரது சீடர்கள் திகைத்துப் போயினர். அதிர்ச்சியோடு கோபமாக, ''குருவே, இது நியாயமா? ஈவிரக்கமே இல்லாத மக்களைச் சேர்த்து வாழுமாறும், இரக்கமுள்ள
இந்தக் கிராமத்து மக்கள் பிரித்து வாழுமாறும் முன்னுக்குப்பின் முரணாகப் பிரார்த்திக்கிறீங்களே" என்று கேட்கத் துடித்தனர். ஆனால் இப்போதும் கேட்பதற்குத் தயக்கமடைந்தனர்.
ஆனால் சீடர்களின் கோபத்தை உணர்ந்துகொண்ட குருநானக், “என் பிரார்த்தனை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இதிலுள்ள உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இரக்கமற்ற கிராமத்து மக்கள் வேறு இடத்திற்குச் சென்றால் அங்குள்ள மக்களையும் இவர்களைப்போல மாற்றி கெடுத்துவிடுவார்கள். எனவேதான் அவர்கள் அந்த ஊரைவிட்டு வெளியேறக் கூடாது என்று பிரார்த்தனை செய்தேன்.
இந்தக் கிராமத்து மக்களோ மனிதநேயமிக்கவர்கள். இவர்கள் வேறுவேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தால் அங்குள்ள மக்களும் இவர்களைப்போல நல்லவர்களாக மாறுவார்கள் என்பதாலேயே இவ்வாறு பிரார்த்தனை செய்தேன் என்று விளக்கமளித்தார். இதுபோல துள்ளறிவு அதிகம் படைத்தவர் அவர்.
தனது வாழ்நாள் முழுவதும், காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம் ஆகிய ஐந்து இழிகுணங்களையும் தள்ளிவிட வேண்டும் என்று வலிறுத்திய குருநானக்கிற்கு வயதானபோது தனது இறுதிக் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தறிந்தார். தனது பக்தர்கள் அனைவரையும் அழைத்து நல்ல வி போதித்தார்.
அப்போது இவரது பக்தர்கள், குருநானக் இறந்ததும் அவரது உடலைப் புதைப்பதா? எரிப்பதா என்ற சர்ச்சையை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தனர். இந்துக்கள் 'எரிக்கும்' கட்சியாகவும், இஸ்லாமியர்கள் 'புதைக்கும் கட்சியாகவும் மாறி கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைக்கேட்ட குருநானக், "நான் இறந்த பிறகு இரண்டு கட்சியி னரும் ஆளுக்கொரு பூமாலையை எனது இரண்டு பக்கங்களிலும் தனித்தனியா வைத்து, எனது உடலோடு அவற்றையும் நன்றாக போர்த்தி விடுங்கள்.
மூன்றாம் நாள் அந்தப் போர்வையை அகற்றுங்கள். எந்தப் பக்கத்துப் பூமாலை வாடாமல், வதங்காமல் இருக்கிறதோ அந்தக் கட்சிக்காரார்களின் யோசனைப்படி செய்துவிடுங்கள்” என்று கூறினார்.
அதேபோல் அவர் இறந்ததும் செய்யப்பட்டது. மூன்றாம் நாள் பொர்வையை அகற்றிப் பார்த்தால், அங்கே பூமாவைகள் மட்டுமே இருந்தன. குருநானக்கின் உடலைக் காணவில்லை!
இதுதான் அவரது அபூர்வ சக்தி!