நமது அன்றாட வாழ்வில் பொருட்களின் நீளங்களை அளக்க நாம் மீட்டர் அளவியைப் பயன்படுத்துகிறோம். அவை சமீ அளவிலும் மிமீ அளவிலும் குறிக்கப்பட்டிருக்கும்.
ஒரு மீட்டர் அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும். ஒரு மீட்டர் அளவியின் மீச்சிற்றளவானது 1 மிமீ ஆகும்.
இதனைப் பயன்படுத்தி வாருட்களின் நீளத்தினை மிமீ அளவுக்குத் துல்லியமாக நாம் கணக்கிடலாம். ஆனால் சிறிய மற்றும் வட்ட வடிவப் பொருட்களை இந்த அளவியின் மூலம் அளக்க முடியாது. எனவே வர்ணியர் அளவி மற்றும் திருகு அளவி ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
பியரி வர்ணியர் (1580-1637) என்பவர் பிரான்சு நாட்டு அரசு அலுவலராக இருந்தவர். சட்டம் மற்றும் வாறியியல் வல்லுநரான அவரது தந்தை அவருக்குக் கணிதமும் அறிவியலும் கற்றுத் தந்தார். அவர் பல காலங்கள் பற்பல நகரங்களைக் கட்டுவதற்காகப் பொறியாளராகப் பணியாற்றினார்.
அக்காலக் கணித மேதைகள், விஞ்ஞானிகளைப் போலவே வரைபடம் வரைதல் மற்றும் நில அளவீடு செய்தல் போன்ற பணிகளில் வ்ணியரும் ஈடுபட்டார். நில அளவீட்டில் அவருக்கு இருந்த ஆர்வம் அவரை அளவீட்டிற்குத் தேவையான கருவிகளைச் செய்யத் தூண்டியது. அதுவே அளவியல்துறையில்துல்லியவளவுகோலான வெர்னியர் அளவுகோல் எனும் கருவியை வடிவமைக்கக் காரணமாயிற்று.
