.

பயன்பாடு என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும். பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.

பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம்.

வடிவப் பயன்பாடு :

ஒரு பொருளின்வடிவம் மாற்றப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது.

எடுத்துக்காட்டாகவிளைபொருளாகியபருத்தியைக்கொண்டுஆடைகள்உருவாக்கப்படும்போது அதன் தேவையும் பயன்பாடும் உயர்கின்றன.

இடப்பயன்பாடு :

ஒருபொருள். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போக்குவரத்து செல்லப்படும்போது, அதன் பயன்பாடு மிகுதியாகிறது.

எடுத்துக்காட்டாக, விளைபொருளான அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும்போது, அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கின்றன.

காலப் பயன்பாடு :

ஒரு பொருளை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கும்போது, அதன் பயன்பாடு மிகுகிறது.

எடுத்துக்காட்டாக,நுகர்வோர்களால் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றைச் சேமித்து வைப்பதால், அவற்றின் தேவையும் பயன்பாடும் மிகுதியாகின்றன.

Previous Post Next Post

نموذج الاتصال