உடல் நலம் என்பது நோயென்று இருப்பது மட்டுமல்ல. இது முழுமையான உடல் நலம் மன நலம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை உள்ளடக்கியது. சத்தான உணவை உண்பதால் நாம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நலமுடன் இருக்க முடியும்.
உடல் நலத்துடன் இருக்கும் போது நீங்கள் தன்னம்பிக்கையோடும் அனைத்து செயல்களில் ஈடுபாட்டோடும் வாழ்க்கையை அனுபவிக்க திறமையுடன் இருப்பார்கள்.
சசத்து குறைவான உணவு வகைகள் உடல் பருமனையும் நோய்களை உண்டாக்குகின்றன உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் உறவில் பாதிப்பை உண்டாக்கும். அதனால் உங்களுடைய உணவில் சரிவிகிதமாக சரியாக உண்ண வேண்டும்.
சரிவிகித உணவு என்றால் என்ன?
நமது உடல் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் தேவையான அனைத்து சத்துகளையும் போதுமான அளவு கொண்ட ஒரு உணர்வு அவசியம். அடையாளத்தை உறுதி செய்யக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்களை சரிவிகித உணவு போதுமான அளவில் கொண்டுள்ளது.
| உங்களுக்கு தெரியுமா ? |
|---|
| உலகளவில் 80 சதவீதத்திற்கு முருங்கைக்கீரை உற்பத்தி இந்தியாவில்தான் உள்ளது. முருங்கைக்கீரையை சீனா அமெரிக்கா ஜெர்மனி கனடா தென் கொரிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன. |
உணவு என்பது போதுமான அளவு நீரையும் சரியான அளவு ஆற்றலையும் நமக்கு வழங்க வேண்டும் .கீழ்க்காணும் காரணங்களுக்காக சரிவிகித உணவு அவசியமாகும்.
* அதிக வேலை செய்யும் திறன் பெறுவதற்கு
* நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கு
* நோய்களை எதிர்க்கும் திறன் பெறுவதற்கு
* உடல் நன்றாக வளர்வதற்கு