.

சிந்துவெளி நாகரிகம்-

தொடக்கத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்தார்கள். அதிலிருந்து சமுதாயங்கள் உருவாகின. பின் அவை சமூகங்களாக வளர்ந்து காலப்போக்கில் நாகரிகங்கள் ஆக மாறின.

மக்கள் ஏன் நதிகரையில் குடியேறினார்கள் ?

* மனிதர்கள் தங்கள் குடியேற்றங்கள் ஆகிய நதிக்கரைகளில் கீழ்க்கண்ட காரணங்களுக்காக தேர்ந்தெடுத்தார்கள்.

* வளமான மண் ஆறுகளில் தண்ணீர் குடிப்பதற்கும் கால்நடைகளின் தேவைகளுக்கும் நீர் பாசனத்திற்கும் பயன்பட்டன.

* போக்குவரத்துக்கு ஏற்ற  வழிகள் ஆக இருந்தன.

ஹரப்பா முதன்முதலில் ஆங்கிலேயர் நகரத்தின் சார்லஸ் தமது இடிபாடுகளை


மேசன் என்ற நூலில் விவரித்தார். 

அவர்


கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிந்த படைவீரரும், ஆராய்ச்சியாளரும் ஆவார் அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்கு பகுதியைப் பார்வையிட்டபோது சில செங்கல் திட்டுகள் இருப்பதைக் கண்டார்.ஜான் மார்ஷல்


அந்தப் பாழடைந்த செங்கற்கோட்டை உயரமானசுவர்களுடனும்,கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார் இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்றுச் சான்று ஆகும்.

கி.பி (பொ.ஆ) 1856 - இல் பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல், அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்குப் பதிலாக பயன்படுத்தினர்.

கிபி (பொ.ஆ) 1920இல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்ச தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர். அப்பொழுது நீண்டநாள் மறைந்து கிடந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகளை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.


1924இல் இந்தியத் தொல்பொருள்ஆய்வுத்துறையின்


இயக்குநர்




உங்களுக்கு தெரியுமா ?
 
'நாகரிகம் ' என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான 'சிவிஸ்' என்பதிலிருந்து வந்தது இதன் பொருள் 'நகரம்' என்பதாகும்.


தொல்லியலாளர்கள் எவ்வாறு புதையுண்ட நகரத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்?                                                                                        *அகழ்வாராய்ச்சியாளர்கள் செங்கற்கள், கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை பயன்படுத்தப்பட்ட காலத்தை அறிந்து கொள்கிறார்கள்.                                                                                                                                               * பண்டைய இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.வான் வழிப் புகைப் படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பைக் கண்டறிந்து கொள்கிறார்கள்.                                                                                                   *நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை (Magnetic scariner) பயன்படுத்துகின்றனர்.                                                                                                                                   * எஞ்சிய தொல்பொருள்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் அறிய முடியும் (தொலை நுண்ணுணர்வு முறை)

ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும்,மொகஞ்ச-தாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.

அவை இரண்டுமே ஒரு பெரிய நாகரிகத்தைச் சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.

ஹரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்களுக்கிடையே சிறிய அளவு வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, ஹரப்பா நாகரிகம்

(மொகஞ்சு-தாரோவை விடப் பழமையானது என முடிவுக்கு வந்தனர்.) 

Previous Post Next Post

نموذج الاتصال