உங்கள் உணவு சரிவிகித உணவாக இல்லாதபோது விளைவுகள் எப்படி இருக்கும்? உடம்பு ஒட்டிய நிலையில் மற்றும் வயிற்றுப் பகுதி மட்டும் உப்பிய நிலையில் இருப்பதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும்.
ஊட்டச்சத்து குறைபாடு.
- நாம் உண்ணும் உணவில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் சரியான விகிதத்தில் கிடைக்கவில்லை என்றால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
- ஊட்டச்சத்து குறைபாடு எனும் வார்த்தை சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளாததால் ஏற்படும் விளைவை குறைக்கிறது.
- ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய்கள் உண்டாகின்றன. நமது உணவில் போதிய அளவு ஊட்டச் சத்து இல்லாததால் ஏற்படும் நோய்கள் ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.
| உங்களுக்கு தெரியுமா ? |
|---|
| சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் படி 14.4 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வகையில் இந்தியா சீனாவிற்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் உடல் பருமன் உடைய கைளை கொண்ட நாடுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. |
புரத சத்து குறைபாட்டினால் வரும் நோய்கள் :
| நோய்கள் | அறிகுறிகள் |
|---|---|
| 1.குவாஷியோர்கர் | வளர்ச்சிக் குறைபாடு, முகம் கால்களில் வீக்கம், வயிற்றுப் போக்கு மற்றும் உப்பிய வயிறு |
| 2.மராஸ்மஸ் | மெலிந்த உடல், மெதுவான உடல் வளர்ச்சி |
தாது உப்புக்கள் சத்து குறைபாட்டினால் வரும் நோய்கள்:
| தாது உப்புக்கள் | நோய்கள் |
|---|---|
| 1. கால்சியம் | ரிக்கெட்ஸ் |
| 2.பாஸ்பரஸ் | ஆஸ்டியோமலேசியா |
| 3.அயோடின் | கிரிட்டினிசம் (குழந்தைகளில்) முன்கழுத்துக்கழலை பெரியவர்கள்) |
| 4.இரும்புச் சத்து | இரத்த சோகை |
உடற்பயிற்சி :
உடல் தகுதியையும் முழுமையான உடல் நலத்தையும் மேம்படுத்தக்கூடிய அல்லது பராமரிக்கக் கூடிய உடல் செயல்பாடு உடற்பயிற்சி எனப்படும்.
உடல் செயல்பாடு என்பது
- குழு விளையாட்டுகள் விளையாடுதல்
- உடற்பயிற்சி
- யோகா
- தனிநபர் விளையாட்டு
- சுறுசுறுப்பாக இயங்குதல்
- நடனம்
ஆகியவைகள் அடங்கும்.
உடற்பயிற்சியின் அவசியங்கள் யாவை ?
- வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிகப்படுத்துதல்.
- வயது முதிர்ச்சியைத் தவிர்த்தல்.
- தசைகள் மற்றும் இதய இரத்த மண்டலத்தை வலுப்படுத்துதல்.
- ஓட்ட விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல்,
- எடையைக் குறைத்தல் அல்லது பராமரித்தல் மற்றும் அனுபவ மகிழ்ச்சி அளித்தல்.
- குழுந்தைகள் மற்றும் முதியோர்களில் உடல்பருமனால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல்.
Tags
அறிவியல் பாட பகுதி