ஊட்டச்சத்துக்கள் அறிமுகம்:
நலம் வார்த்தையானது முழுமையான மன மற்றும் உடல் நலத்தைக் குறிக்கிறது. மனிதர்கள் தங்கள் நலத்தை குறைந்தபட்ச அளவிலாவது பேணுவதற்கு சுகாதாரத்தைப் உள்ளது.
| ஊட்டச்சத்து உடல்நலம் |
* உலக சுகாதார நிறுவனம் (WHO), "நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூக நலனைக் குறிப்பதாகும்: நோயின்றி இருப்பதை மட்டும் குறிப்பதல்ல என்று வரையறுத்துள்ளது.
ஹோமியோஸ்டேசிஸ் என்றால் என்ன?
* உடல் நலம் என்பது நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம், உடலினுள் சமநிலையைப் பேணுகின்ற சிறப்பான நிலையாகும். இந்நிலை ஹோமியோஸ்டேசிஸ் எனப்படுகிறது.
சுகாதாரம் என்றால் என்ன?
* சுகாதாரம் என்பது உடல் நலனிற்கு ஏற்ற நடைமுறைகளை நிறுவக்கூடிய அல்லது பராமரிக்கக்கூடிய அறிவியல் ஆகும்.
*தினமும் பற்களைத் துலக்குதல் என்பது வாயின் சுகாதரத்தைப் பேணும் முக்கிய வழியாகும். நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும், நோய் பரவாமல் இருப்பதற்காகவும் நம்மையும், நமது சுற்றுப் புறத்தையும் தூய்மையாகப் பராமரிக்கும் செயல்முறையே சுகாதாரம் என்று வரையறுக்கப்படுகிறது.
உணவின் ஊட்டச்சத்துக்கள் என்றால் என்ன?
நமக்கு ஆற்றலைத் தருகின்ற, உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய வேதியியல் அவையே, ஊட்டச்சத்துகள் எனப்படுகின்றன. அவையாவன:
முக்கிய ஊட்டச்சத்துகள் ஆறு வகைப்படும்.
- 1. கார்போஹைட்ரேட்டுகள்
- 2. புரதங்கள்
- 3.கொழுப்புகள்
- 4. வைட்டமின்கள்
- 5. தாது உப்புக்கள்
- 6. நீர்
கார்போஹைட்ரேட்டுகள் :
- கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் தரும் உணவு கூறுகளாகும்.
- கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து ஆகிய வடிவில் நாம் பெறுகிறோம்.
| கார்போஹைட்ரேட்டுகளின் நிலை | மூலப்பொருள்கள் |
|---|---|
| சர்க்கரை | பழங்கள் தேன் கரும்பு சக்கரை பீட்ரூட். |
| ஸ்டார்ச் | அரிசி சோளம் உருளைக்கிழங்கு மற்றும் பெற. |
| நார்ச்சத்து | முழு தானியங்கள் கொட்டை உணவுகள் மற்றும் பிற. |
- கொழுப்பு என்பதும் ஆற்றல்தரும்ஓர் உணவு ஆகும். இது கார்போஹைட்ரேட்டைவிட அதிக ஆற்றலைத் தரக்கூடியது.
- வெண்ணெய், நெய், பால், பாலாடைக் கட்டி, பன்னீர், கொட்டைகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவை கொழுப்புச் சத்து உள்ள சில முக்கிய உணவுப் பொருள்கள் ஆகும்.
- இவை நமது உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு, உடலைப் பாதுகாத்து உடல் செல்களையும் பாதுகாக்கின்றன.
- உடல் வளர்ச்சி, செல்களைப் புதுப்பித்தல் மற்றும் செரிமானம் போன்ற பல்வேறுவிதமான உடற்செயல்களுக்கும் புரதங்கள் மிகவும் அவசியம். முட்டை, மீன்,பால்,கோழி,இறைச்சி, சோயாபீன்ஸ், கொட்டைகள், பருப்புக்கள் போன்றவற்றில் புரதச்சத்து உள்ளது.
- புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் ஆகும்.
- உடலில் நடைபெறும் பல்வேறுபட்ட உயிர் வேதிவினைகளுக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம்.
- பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சி போன்றவற்றில் வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.
- வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. A, B, C, D, E மற்றும் K ஆகிய ஆறு முக்கிய வைட்டமின்கள் உள்ளன.
- இவற்றுள் வைட்டமின் B மற்றும் வைட்டமின் c இரண்டும் நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.
- வைட்டமின் A, D, E மற்றும் K ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.
- செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தாது உப்புகள் உடல் வளர்ச்சிக்கும், உடல் தேவைப்படுகின்றன.
- கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை, பால், மீன் மற்றும் பழங்கள் போன்றவை தாதுஉப்புக்கள் நிறைந்த முக்கிய உணவுப் பொருள்கள் ஆகும்.
- தாது உப்புகளும் பாதுகாப்பு உணவுகள் ஆகும்.