வேர்த் தொகுப்பு :
வேர் என்பது ஒரு தாவரத்தின் முக்கிய அச்சின் கீழ்ப் பகுதியாகும். இது நிலத்திற்குக் கீழே காணப்படுகிறது. வேர்களில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் இல்லை.
அதன் நுனிப் பகுதியில் வேர்மூடி உள்ளது. வேர் நுனிக்குச் சற்று மேற்பகுதியில் வேர்த்தூவிகள் ஒரு கற்றையாகக் காணப்படுகின்றன. வேர்கள் நேர் புவிநாட்டம் உடையவை.
தாவரங்களின் வேர்த் தொகுப்புகள் இரண்டு வகைப்படும், அவை:
அ. ஆணிவேர்த் தொகுப்பு
ஆ.சல்லிவேர்த் தொகுப்பு
அ. ஆணிவேர்த் தொகுப்பு :
விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது. முளைவேர் தடித்த முதல்நிலை வேராக வளர்கிறது. இதிலிருந்து துணை வேர்களான இரண்டாம்நிலை வேர்கள் தோன்றுகின்றன. பொதுவாக இரு வித்திலைத் தாவரங்களில் இவ்வகை வேர் காணப்படுகிறது.
எ.கா. அவரை, மா, வேம்பு.
| ஆணிவேர் |
ஆ.சல்லிவேர்த் தொகுப்பு
முதல்நிலை வேர், சிறிது காலத்தில் அழிந்து, தண்டின் அடிப்பகுதியில், சம பருமனுள்ள வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன. பெரும்பாலும் ஒரு வித்திலைத் தாவரங்களில் இவ்வேர்த்தொகுப்பு காணப்படுகிறது.
எ.கா.நெல், புல், மக்காச் சோளம்.
| சல்லி வேர் |
வேரின் பணிகள் :
* வேர்கள் தாவரத்தைப்பூமியில் நிலைநிறுத்துகின்றன.
* மண்ணிலிருந்து நீரையும், கனிமச் 8KRTL8 சத்துக்களையும் உறிஞ்சுகின்றன.
* கேரட், பீட்ரூட் போன்ற தாவரங்கள், தாங்கள் தயாரித்த உணவைத் தங்களின் வேர்களில் சேமிக்கின்றன.