திருப்புதல் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் :
திட்டமிட்டபடி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் பொதுத்தேர்வுகளில் எழுதவேண்டும். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும் என்று ஏனோ தானோ என்று இருக்காமல் தோல்வி அடையாமல் தேர்வில் தேர்ச்சி அடைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு படிக்குமாறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜனவரி 17ஆம் தேதி 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருந்த நிலையில் அது தினத்தை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 18 ஆம் தேதியா தைப்பூசம் காரணமாக அரசு பொது விடுமுறையாக விடப்படுகிறது. ஆகவே "தைப்பூசத்துக்கு அடுத்த நாள் ஜனவரி 19ஆம் தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தி வைக்கப்படும் " தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடியாக தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு வகுப்புகள் வைக்கப்பட்டு தேர்வுகளுக்கான அட்டவணை வகுக்கப்பட்டு தேர்வுக்காக மாணவர்கள் தயாராகும்படி உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் தேர்வு நடைபெறும்.