படம்- ஆண்டி இந்தியன்
நடிகர்கள் -ப்ளூ சட்டை மாறன் மற்றும் பலர்.
தமிழ் திரைப்படங்களை தரக்குறைவாக பேசி திரை விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் இந்த ஆண்டி இந்தியன்.
இத்திரைப்படத்தில் பாஷா என்னும் பெயரில் இறந்த நிலையில் காண்பிக்கப்படுகிறார் மாறன். அவரது உடலை அடக்கம் செய்ய முஸ்லீம் முறைப்படி அடக்கம் செய்வதாக இருந்தார்கள்.
ஆனால் அவரது அம்மா ஒரு இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவராக இருந்ததால் இஸ்லாமிய முறைப்படி தான் சடங்கு செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வருகிறார்கள்.
இப்படியே இந்து முஸ்லிம் கிறிஸ்துவ முறைப்படி மாறி மாறி அடக்கம் செய்ய கோரி போராட்டம் செய்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க ஒரு சில அரசியல்வாதிகள் இறந்த உடலை வைத்து அரசியல் செய்யும் காட்சிகளும் இடம்பெறுகின்றன.
கடைசியில் அந்த சடலத்தை புதைத்தார்கள் இல்லையா என்பதுதான் மீதி கதை. இறந்த உடலை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டுகிறது இத்திரைப்படம்