கதாநாயகன் எல்லா படத்தில் வருவது போல கதாநாயகியை காதலித்து வருகிறார். இந்த தகவல் வழக்கம்போல கதாநாயகிகளின் அப்பாக்களுக்கு தெரிவது போல தெரிய வருகிறது.
கதாநாயகியின் அப்பா ஒரு சின்சியர் போலீஸ் ஆபீஸர். சாயாஜி ஷிண்டே இத்திரைப்படத்தில் கதாநாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார்.
ஹீரோ கதாநாயகியின் அப்பாவிடம் சென்று உங்கள் பெண்ணை நான் காதலிக்கிறேன் எனவே எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்கிறார்.
அதற்கு சாயாஜி ஷிண்டே எனக்கு டிஜிபி பதவி வாங்கி கொடு நான் உனக்கு என் பெண்ணை கொடுக்கிறேன் என்று ஒப்பந்தம் பேசுகிறார்.
அதற்கு ஹீரோ சரி உங்கள் துப்பாக்கியை மட்டும் கொடுங்கள்! நான் உங்களுக்கு நியாயமான முறையில் டிஜிபி பதவி வாங்கி கொடுக்கிறேன் என்று கூறி விட்டு துப்பாக்கியை வாங்கி எடுத்து கொண்டு செல்கிறார்.
துப்பாக்கியை வாங்கி கொண்டு சிட்டியில் உள்ள அனைத்து ரவுடி மாபியா கும்பல் களையும் ஹீரோ அழைக்கிறார். அதன் ஒவ்வொரு பெருமையும் ஹீரோயினின் அப்பாவிற்கு கொண்டு சேர்க்கிறார்.
சிட்டியில் உள்ள அனைத்து மாபியா ரவுடி கும்பலை அழித்து விட்டாரா ? ஹீரோ கதாநாயகி திருமணம் செய்தாரா ? இல்லையா என்பதே மீதிக்கதை.