Enemy திரைப்படம் தமிழ் விமர்சனம்
படம்- ENEMY
நடிகர்கள் - விஷால், ஆர்யா பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா,
நடிகர் விஷால் இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா அவரது மகனாக வருகிறார். அதேபோல நடிகர் ஆர்யா நடிகர் பிரகாஷ் அவர்களின் மகனாக வருகிறார். தம்பி ராமையா ஒரு பயந்த சுபாவம் உடையவர்.
எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது பிள்ளையையும் அப்படியே இருக்க சொல்லி வளர்ப்பார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு ரிட்டயர்டு சிபிஐ அதிகாரி. எனவே அவரது மகன் ஆர்யாவை சிறுவயதிலிருந்தே காவல்துறை வேலைவாய்ப்பு பயிற்சி கொடுத்து வருவார்.
அவரது திறமையான நுணுக்கமான நுட்பமான பயிற்சிகளை பக்கத்து வீட்டில் இருந்து கவனித்து வந்த விஷால் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து அவரது மகனுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை அவரும் செய்து வருவார்.
தம்பி ராமையாவுக்கு தெரியாமல் ஒரு காவல்துறை அதிகாரி தேவையான அனைத்து விஷயங்களையும் பிரகாஷ் ராஜிடம் கற்று வந்தார் விஷால்.