சூரியவன்ஷி திரைப்படத்தில் நடிகர் அக்சய் குமார் பெயர் சூர்யா. பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவை குறிவைத்து நடத்தப்படும் குண்டுவெடிப்புகளை தடுக்கும் ஒரு சின்சியர் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார் நடிகர் அக்சய் குமார்.
படத்தின் முதலில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நடத்தப்படும் குண்டுவெடிப்பு காட்சி காண்பிக்கப்படும். அதில் வெளியூரிலிரந்து ரயிலில் வரும் தன் மகனை பார்க்க செல்லும் தாய் தந்தை இருவரும் குண்டு வெடிப்பில் சிதறி வெடிக்கும் காட்சியை காண்பிப்பார்கள். அவர்கள் இருவரும் தான் அக்சய் குமார் இன் அப்பா அம்மா.
அதன்பிறகு நடத்தப்படும் பல்வேறு குண்டுவெடிப்புகளை தடுக்கும் சின்சியர் போலீஸ் அதிகாரி சூர்யாவுக்கு அடுத்தவர் பெயர்களை மறந்து விடுவது ஒரு வியாதி ஆகிவிட்டது. இதற்கு ட்ரீட்மன்ட் காக ஒரு மருத்துவரிடம் செல்ல அந்த மருத்துவர் சூர்யாவுக்கு பழக்கமாகி விட இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதன்பிறகு பாகிஸ்தான் தீவிரவாதி ரியாஸ் மற்றும் அவனது கூட்டாளிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்திய அதை தடுக்க சென்ற சூர்யாவுக்கு அவரது மனைவி கோபித்துக் கொண்டு பேசாமல் சென்று விடுகிறார்.