சிவகுமாரின் சபதம்-தமிழ் திரை விமர்சனம்
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் சிவகுமாரின் சபதம்.
பட்டு நெசவுத் தொழிலில் திறமைவாய்ந்த வரதராஜன் என்ற பெரியவரை ஏமாற்றி அவர் நெசவு செய்து தந்த புடவைகளை விட்டு பெரிய ஆளாகிறான் அவரது வீட்டில் வேலை செய்யும் சந்துரு. அந்த புடவைகள் அனைத்தும் கலை வடிவத்துடன் செய்யப்பட்ட ராஜப் புடவைகளாகும்.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஆதியின் பெயர் சிவகுமார். இவரது அப்பா புதிதாகத் திருமணமாகி அவரது வீட்டிற்கு மனைவியோடு வருகிறார். ஆரத்தி எடுத்த சிவகுமார் பாட்டி வலியோடு கத்தியபடி கீழே விழுகிறார்.
அனைவரும் பதறி போய் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அந்த பிரசவத்தில் சிவகுமார் அவரின் சித்தப்பா பிறந்தார். ஆனால் பரிதாபமாக சிவகுமார் பாட்டி உயிரிழந்தார்.
அன்றிலிருந்து சிவகுமாரின் அம்மா அவரது சித்தப்பாவையும் சேர்த்து வளர்த்தாள். தன் பிள்ளை போல தனது கணவரது தம்பியையும் சேர்த்து வளர்த்தார். அதன்பிறகுதான் சிவகுமார் பிறந்தான்.
சிவகுமார் பள்ளிப்பருவத்தில் பள்ளிக்கூடத்தில் அவரது சித்தப்பாவை சித்தப்பா என்று அழைத்ததால் மாணவர்கள் சித்தப்பாவை கேலி செய்தனர். அன்றிலிருந்து சித்தப்பா சிவகுமாரை வெறுத்தார்.
இப்படியே போக சிவகுமார் பெரியவனாகி ஒரு துணிக் கடையில் பிரச்சனை செய்கிறான். இந்த பிரச்சினை அவரது சித்தப்பா வர அதன் பிறகு சித்தப்பா சிவகுமார் ஐ அழைத்துக்கொண்டு சென்னை செல்ல அங்கே இப்படியே பல்வேறு பிரச்சினைகள் போக கடைசியில் இராஜப் புடவைகளை
Tags
Tamil 2021 movies