படம்- சின்ரெல்லா
நடிகர்கள் - ராய் லட்சுமி, சாஷி அகர்வால்,ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன்.
சென்னையில் உள்ள சவுண்ட் இஞ்சினியராக பணிபுரிந்து வருகிறார் ராய் லட்சுமி. பறவைகள் வித்தியாச வித்தியாசமான சப்தங்களை படம் பிடிப்பதற்காக தனது நண்பர்களுடன் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு செல்கிறார்.
அங்கே உள்ள ஒரு பங்களாவில் தங்கி தனது ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறார் ராய் லட்சுமி. ஆனால் அந்த ஊரில் நடக்கும் பல வினோதங்கள் கண்டு ஊர் மக்கள் பயப்படுகிறார்கள்.
அடுத்தடுத்து கொடைக்கானல் மலைப்பகுதியில் பல கொலைகள் அரங்கேறுகின்றன.
இறுதியாக போலீஸ் ஊரில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் ராய் லட்சுமி தான் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள்.
அதன்பிறகு ராய் லட்சுமி போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கினார் இல்லையா என்பதே மீதி கதை?
அப்படி அந்த பங்களாவில் என்ன இருக்கிறது. எப்படி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. என்பதுதான் திரைப் படத்தின் மீதி கதை.
ஆடுகளம் நரேன் இத்திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர் பங்களாவில் நடத்தும் கூத்துக்கள் மக்களை சிரிக்க வைக்கின்றன.
மாடர்ன் உடைகளை அணிந்த அழகான பேயாக வலம் வருகிறார் ராய் லட்சுமி.