படம்- ராட்சசன்
நடிகர்கள் - விஷ்ணு விஷால், அமலாபால்,
ராட்சசன் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திகில் திரைப்படமாகும். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த பிரமாண்டமான திகில் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஒரு காவல் அதிகாரியாக வருகிறார். அமலாபால் இறந்த தன் அண்ணனின் ஒரே ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
அடிக்கடி சென்னையில் பெண்கள் கடத்தப்படுவதும் பிறகு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
விஷ்ணு விஷால் அமலாபாலுடன் நட்பாக பழகி காதலித்து வருகிறார்கள். அமலா பாலுக்கும் விஷ்ணு விஷால் உடன் அந்த பெண் குழந்தை பழகுவது பிடித்திருந்தது.
இந்த நிலையில் அந்த குழந்தை காணாமல் போகிறது. பதறிப்போன விஷ்ணு விஷால் அமலா பாலும் குழந்தையை தேடி அலைகிறார்கள்.
அப்போதுதான் அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது. ஒரு சைக்கோ கில்லர் கிறிஸ்டோபர் தான் பெண் குழந்தைகளை கடத்தி சென்று கொடூரமாக கொலைசெய்து வருவது கண்டு பிடிக்கப்படுகிறது.
சிறு வயதிலேயே வயதான தோற்றத்துடன் காணப்படும் கிறிஸ்டோபரை பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் அனைவரும் கேலியும் கிண்டலும் செய்து வந்ததால் மனம் நொந்துபோன கிரிஸ்டோபர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டார்.
அவரது அம்மா ஒரு மேஜிக் வித்தை தெரிந்த மாயாஜால காரி. தன் மகனை அடிக்கடி தன் மாய வித்தைகளை மகிழ்விப்பார். இருந்த போதிலும் பள்ளியில் நடக்கும் கொடுமைகளை நினைத்து மனம் புழுங்கி வந்தார்.
கிறிஸ்டோபர் வாழ்வின் ஒரு பெண் வந்து அவனை நன்றாக கவனித்து மற்ற மாணவர்கள் மத்தியில் விட்டு கொடுக்காமல் பேசி வந்தார்.
இதனை காதல் என்று நினைத்துக் கொண்ட கிரிஸ்டோபர் அந்தப் பெண்ணிடம் ப்ரொபோஸ் பண்ண அந்தப் பெண் ' சீ!! உன்ன எல்லாம் யாரு லவ் பண்ணுவா? நீ ஒரு கிழவன்.' என்று அவனை அசிங்க படுத்தி விட்டு சென்று விடுவார்.
இது மனதில் கொண்டு கிறிஸ்டோபர் அவளைக் கொடூரமாக கொலை செய்து விட்டு அந்தப் பழியை அவளது அம்மா ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார்.
அதன் பிறகு பெண்களை வெறுக்கும் கிறிஸ்டோபர் தொடர்ந்து பெண் குழந்தைகளை கடத்தி சென்று கொலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கிறிஸ்டோபர் இடம் மாட்டிய அமலாபால் அண்ணன் மகள் கிடைத்ததா! இல்லையா?
கடைசியில் கிரிஸ்டோபர் ஹீரோவை கொலை செய்கிறாரா? ஹீரோ அவனை கொலை செய்தாரா என்பது தான் மீதி கதை.
படம் முழுக்க விறுவிறுப்பாகவும் ஒவ்வொரு வினாடியும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போரை ரசித்து பார்க்க வைக்கிறது இத்திரைப்படம்.
திதிரைப்படம் வெளியாகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வரக்கூடிய திரைப்படம்.