.

வினோதய சித்தம் (2021)-சமுத்திரக்கனியின் மாறுபட்ட நடிப்பில் தமிழ் விமர்சனம்

 படம் - வினோதய சித்தம்.

நடிகர்கள்- சமுத்திரகனி, தம்பி ராமையா



தம்பி ராமையா ஒரு தனியார் கம்பெனியில் அசிஸ்டன்ட் GM ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஒரு மகன் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். எப்படியாவது அடுத்து GM பதவி அவருக்கு தான் கிடைக்கப்போகிறது என்று மகிழ்ச்சியில் இருந்தார்.

ஒருநாள் இரவில் வெளியூரிலிருந்து காரில் தன் இல்லத்திற்கு செல்கிறார். அப்போது விபத்து நடக்கிறது. அவரது உயிர் பிரிகிறது.

அதன்பிறகு சமுத்திரக்கனி அவரது வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி உயிர் கொடுக்கிறார். மூன்று மாத காலம் அவகாசம் கொடுக்கிறார் அந்த மூன்று மாதத்திற்குள் தம்பி ராமையா நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டு வருமாறு வாய்ப்பு கொடுக்கிறார் சமுத்திரகனி.

அந்த மூன்று மாதத்திற்குள் தம்பி ராமையா உடன் சமுத்திரகனி தங்கி அவரது அன்றாட வாழ்வில் பங்கேற்கிறார். சமுத்திரக்கனி நேரத்தை மாற்றும் விதி என்று வித்தியாசமான ஒரு கேரக்டராக இந்த திரைப்படத்தில் வருகிறார்.




தம்பி ராமையாவின் மூத்த மகள் ஒரு பையனுடன் அவரிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரது மகன் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

மேலும் அவருக்கு கிடைக்க வேண்டிய GM பதவி வேறு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது. இப்படி தம்பி ராமையா வாழ்வில் அவருக்கு தெரியாமல் நிறைய நடந்துவிடுகிறது. 

இறுதியாக அவரது இளைய மகள் அவரது மானத்தை காப்பாற்றுகிறார். அப்பா சொல்லும் பையனைதான் திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுகிறார். பிறகு அவருக்கு ஒவ்வொன்றாக வருகிறது. 

அவர் ஜிஎம் பதவிக்கு ஆசைப்பட்டு கிடைக்காத நிலையில் இப்போது அவருக்கு MD பதவி கிடைத்து விட்டது.

மேலும் தனது மருமகளை அவர் ஏற்றுக்கொள்கிறார். தனது மூத்த மகளையும் மாப்பிள்ளையும் கூட ஏற்றுக் கொள்கிறார். அதன்பிறகு தனது இளைய மகளை திருமணம் செய்து கொடுக்காமல் படிக்கவைக்கிறார்.

சரியாக சமுத்திரகனி தம்பி ராமையாவை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் நேரம் மிக மிக முக்கியமானது. நேரத்தை சேமித்து  நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும்.

Previous Post Next Post

نموذج الاتصال