படம் - Blood Money
நடிகர்கள் - பிரியா பவானி சங்கர்,கிஷார், ஷிரிஸ்.
இயக்கம் - கேஎம் சர்ஜுன்
தயாரிப்பு - எம்பரர் என்டர்டெயின்மென்ட்.
தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணன் தம்பிகளான கிஷார் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரும் செய்யாத ஒரு குற்றத்திற்காக குவைத் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள்.
அந்நாட்டு அரசு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது. என்ன செய்வது என்று தெரியாது இறுந்த அந்த சகோதரர்களை காப்பாற்ற யாருமே இல்லை என்று நினைத்திருந்த வேளையில் களமிறங்குகிறார் பிரியா பவானி சங்கர்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகை ஆசிரியராக வேலைக்குச் சேருகிறார் பிரியா பவானி சங்கர். நிஜ வாழ்க்கையில் ஏற்கனவே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா பவானி சங்கர் ஒரு பத்திரிகையாளர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதலால் தனது பத்திரிக்கை ஆசிரியர் கேரக்டரை கச்சிதமாக கொடுத்து இருந்தார்.
குவைத் ஜெயிலில் இருக்கும் அந்த சகோதரர்களை பிரியா பவானி சங்கர் காப்பாற்றினாரா ! இல்லையா ! என்பதே மீதிக்கதை...