.

கலாட்டா கல்யாணம் (2021)- தமிழ் திரை விமர்சனம்.

 படம்- கலாட்டா கல்யாணம்.

நடிகர்கள் - தனுஷ், சாரா அலி, அக்ஷய் குமார்,

ஆனந்த் எல் ராய் - தனுஷ் - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் 2021 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று 24 ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியான நகைச்சுவை திரைப்படம் அட்ராங்கி ரே.

தமிழில் கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் வெளியானது. இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சாரா அலி தனுஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.


தனுஷ் டெல்லிக்கு காலேஜ் படிப்பதற்காக செல்கிறார். அந்த நேரத்தில் வில்லன்கள் கதாநாயகிக்கான சாரா அலி யை துரத்தி வருகிறார்கள்.

தனுஷ் யாரிடமோ போன் பேசி வந்த நிலையில் சாரா அலி யை காப்பாற்றுகிறார். அதன்பிறகு கதை மெல்ல நகைச்சுவையாக நகர்கிறது. சாரா அலி பாட்டி அவருக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்.

தனுஷுக்கும் சாரா அலி ஆகியோருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்கிறார்கள்.

தங்கள் காதல் கதைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த நேரத்தில் வெளிவருகிறார் அக்ஷய்குமார்.

சாசாரா அலி மனநோய் பாதிக்கப்பட்டுள்ள கேரக்டராக நடித்திருக்கிறார். அவரது நோயை குணப்படுத்த தனுஷ் மேற்கொள்ளும் முயற்சிகள் முட்டாள்தனமான நகைச்சுவையை வரவழைக்கின்றன.

அக்ஷய் குமார் யார்? அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை. ஏ ஆர் ரகுமான் பின்னணி இசை நன்றாக இருந்தது

Previous Post Next Post

نموذج الاتصال