.

அரண்மனை-3(2021)-தமிழ் திகில் திரைப்படம்

 படம்- அரண்மனை 3

இயக்குனர்- சுந்தர் சி

தயாரிப்பு- குஷ்பு சுந்தர் சி

நடிகர்கள் - ஆர்யா, விவேக், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சுந்தர் சி,யோகிபாபு, மற்றும் பலர்


நடிகர் மற்றும் இயக்குனர் ஆகிய சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள திகில் திரைப்படம் அரண்மனை 3 . ஏற்கனவே அரண்மனை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஊர் சாமியார் ஒருவரின் மகள் கல்யாணத்திற்குப் செல்கிறார் அரண்மனையிலிருந்து ஜமீன்தார். அங்கே சாமியார் மகன் திருமணம் செய்துகொள்ள போகும் கல்யாணப் பெண்ணின் அழகில் மயங்கி ஜமீன்தார் தாலி எடுத்துக் கொடுப்பதற்கு பதிலாக தாலியை கட்டி விடுகிறார்.

பதறி போன ஊர் மக்களும் சாமியார் சாமியார் மகனும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு எல்லாரும் மன்னித்து விடுங்கள் நீங்கள் நினைப்பதை விட நன்றாகவே ராணி போல அரண்மனையில் வைத்து பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ஆண்ட்ரியாவை அழைத்துச் செல்கிறார். அவர் கூறியபடியே ராணி ஆகவே வைத்து பாதுகாத்து வந்தார்.

அரண்மனை-3(2021)-தமிழ் திகில் திரைப்படம்

அரண்மனையில் தன் காதலன் ஊர் சாமியார் மகனை நினைத்து அழுது புலம்புகிறார் ஆண்ட்ரியா. இந்த நிலையில் ஆண்ட்ரியா கர்ப்பம் தரித்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தையின் நெற்றியில் சாமியார் மகன் நெற்றியில் உள்ளது போல மச்சம் இருந்ததைக் கண்டு பிடித்த அரண்மனை வேலைக்காரி ஜமீன்தார் அறைக்கு தகவல் தெரிவிக்கிறாள்.

தகவலறிந்த ஜமீன்தார் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை சொல்லி உத்தரவிடுகிறார் வேலைக்காரியிடம். அதன்படியே வேலைக்காரியும் விஷம் வைத்து குழந்தையை கொன்று விடுகிறாள்.

Previous Post Next Post

نموذج الاتصال