தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் 2021 ஆண்டு தீபாவளி அன்று வெளியானது 'அண்ணாத்த' திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,பாண்டியராஜ், சூரி, சதிஷ் மற்றும் பல பிரபல நடிகர் நடிகைகள் இடம் பெற்றிருந்தனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்த் தங்கச்சியாக நடித்திருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மிஞ்சும் அளவிற்கு இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார்.
அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் பெயர் காளையன். கீர்த்தி சுரேஷ் பெயர் தங்க மீனாட்சி. ரஜினிகாந்த் ஹிட்ஸ் சுரேசை எப்பொழுதும் தங்கம் தங்கம் என்றுதான் செல்லமாக அழைப்பார். அதன்படியே தங்கம் தங்கம் என்ற பாடல் மூலம் ஒரு அண்ணன் தங்கை பாசப் போராட்டத்தை நடத்தி இருப்பார்கள்.
அண்ணனின் பேச்சை தட்டாத ஒரு செல்ல தங்கையாக தங்க மீனாட்சி இருக்கிறார். அப்படி இருக்கும்போது காளையன் என்கிற ரஜினிகாந்த் பிரகாஷ்ராஜுடன் பிரச்சினை ஏற்பட்டு அடிக்கடி மோதல்கள் நடந்து வந்தன. ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் மனம் திருந்தி தான் செய்த தவறுகளை ரஜினிகாந்துடன் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கிறார்.
அதன்பிறகு பிரகாஷ்ராஜ் தனது தம்பிக்கு ரஜினிகாந்த் தங்கையை கல்யாணம் செய்து வைக்கக்கோரி தாம்பூல தட்டுடன் ரஜினிகாந்தை கேட்கிறார். ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுடன் கேட்க அவரும் அண்ணன் விருப்பமே எனது விருப்பம் என்று ஒப்புக் கொள்கிறார். அதன்படி ரஜினிகாந்த் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்.
கடைசியாக கல்யாண நாள் வந்தது. கல்யாணத்திற்கு முன்பு இரவில் சொந்த பந்தம் அனைத்தும் மண்டபத்திற்கு வந்த நிலையில் மணப்பெண் கீர்த்தி சுரேஷ் வீட்டை விட்டு தனது காதலனுடன் ஓடி விடுகிறார். இது தெரியாமல் ஊரெல்லாம் அவரைத் தேடி அலைகிறார்கள்.
கடைசியாக தனது தங்கை ரயிலில் ஒரு பையனுடன் இருப்பதை அறிந்த ரஜினிகாந்த் தங்கையிடம் வரச்சொல்லி கேட்க கீர்த்தி சுரேஷ் வர மறுத்துவிட்டார். ரஜினிகாந்தும் தனது தங்கையை கட்டாயப் படுத்த விரும்பாமல் அவரது வழியில் விட்டுவிட்டார்.
அதன் பிறகு தனது கணவருடன் அவரது வீட்டிற்கு கொல்கத்தா சென்று வாழ்ந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் கணவரின் தொழிலுக்கு இடைஞ்சலாக வரும் கொல்கத்தா ரவுடிகள் ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தையே அழித்து விடுகிறார்கள். மேலும் கணவரின் சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்றி, கீர்த்தி சுரேஷ் கணவரையும் ஜெயிலில் அடைத்து விடுகிறார்கள்.
தனது தங்கையைத் தேடி கொல்கத்தா வரும் ரஜினிகாந்த் அங்கே தனது தங்கை படும் துயரங்களை கண்டு பொங்கி எழுகிறார். அதற்கு பிறகு தனது தங்கையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் கொல்கத்தா ரவுடிகளிடமிருந்து தனது தங்கையையும் அவரது கணவர் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கிறார்? என்பதுதான் மீதிக்கதை.