படம்- தமிழ் படம் 2
நடிகர்கள்- மிர்ச்சி சிவா, சதீஷ்குமார்.
மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான திரைப்படம். ஏற்கனவே தமிழ் படம் என்கிற திரைப்படம் மூலம் மிர்ச்சி சிவா பிரபலமானார்.
இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு நகைச்சுவை வில்லனை (சதீஷ்குமார்) பிடிப்பதற்காக ஒரு நகைச்சுவை ஹீரோ (மிர்ச்சி சிவா) செய்யும் அலப்பறைகள்.
முதலில் சதீஷ்குமார் திருட்டுக்களை செய்து வருவதாக கூறி மேலிடத்திலிருந்து சிறப்பு காவல்துறை அதிகாரியாக சிவா நியமிக்கப்பட்டு சதீஷ் குமார் தேடி வருகிறார்.
சதீஷ்குமார் எந்திரன் படம் ரோபோவாக மாறுவதும் மன்னர் காலத்தில் சென்று புலவர்களுக்கு புலவராக போட்டி போடுவதும் வித்தியாசமான பல கெட்டப்புகளில் அடிக்கடி வந்து மக்களை மகிழ்வித்து செல்வதுதான் இத்திரைப்படம்.
குழந்தைகள் பார்க்க ஏற்ற திரைப்படம். படம் முழுவதும் எந்த கருத்துமே இல்லாமல் வெறுமனே காமெடியாக தான் செல்கிறது.