படம்- சித்திரை செவ்வானம்
நடிகர்கள்- சமுத்திரகனி, பூஜா கண்ணன்,
தமிழ் மக்களுக்கு நல்ல பல கருத்துக்களை தான் நடிக்கும் படங்கள் வாயிலாக கொண்டு செல்பவர் நடிகர் மற்றும் இயக்குனர் ஆகிய சமுத்திரகனி.
எந்த ஒரு குடும்ப திரைப்படம் ஆனாலும், ஒரு படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கும்போதும் மற்ற திரைப்படங்களில் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும்போதும் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற கருத்துக்களை மக்களுக்கு கொண்டு செல்பவர்.
தற்போது 2021 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியான 'சித்திரை செவ்வானம்' என்கிற திரைப்படம் ஒரு அப்பா மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை எடுத்துரைக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
கிராமத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை கவனித்து வருபவர் முத்துப்பாண்டி (சமுத்திரகனி) அவரது மகள் ஐஸ்வர்யா. முத்து பாண்டியின் மனைவி வயலில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காரணத்தினால் தன் மகளை எப்படியாவது ஒரு டாக்டராக ஆக்கிவிட வேண்டும் என்று கனவோடு இருந்தார்.
அதற்காக மகளே தொடர்ந்து படிக்க வைத்திருந்தார். பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து தனது குடும்பத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ஐஸ்வர்யா.
அதன் பிறகு மேல்படிப்புக்காக தன் நிலத்தின் ஒரு பகுதியை விற்று அதனை ஐஸ்வர்யாவின் படிப்பு முத்துப்பாண்டி செலவிட்டார். தந்தையின் கஷ்டத்தை புரிந்து ஐஸ்வர்யாவும் ஒழுங்காக கஷ்டப்பட்டு படித்து வந்தார்.
ஐஸ்வர்யா விடுதியில் படித்து வந்ததால் விடுதியில் நடக்கும் சில அநியாயங்கள் ஆளாகிறாள். விடுதியில் அவள் குளிக்கும் போது வீடியோ எடுத்து சிலர் மிரட்டுகிறார்கள். அதன் பிறகு ஐஸ்வர்யா மாயமாகிறாள்.
ஐஸ்வர்யாவை தேடி விடுதி வந்த முத்து பாண்டி தன் மகள் காணாமல் போய் விட்ட செய்தியை கண்டு மனமுடைந்து போகிறார். அதன்பிறகு முத்துப்பாண்டி என் மகளை கண்டுபிடித்து விட்டாரா! இல்லையா? என்பதே மீதிக்கதை.