படம் - ஜெயில்
நடிகர்கள் - ஜிவி பிரகாஷ், அபர்ணதி, ராதிகா,நந்தா ராம்,பசங்க பாண்டி,ரவி மரியா.
இயக்குனர் - வசந்தபாலன்.
வேலைக்கு செல்லாமல் வெட்டியாக சிறு சிறு குற்றங்களை செய்துவிட்டு சுற்றி திரிபவன் கருணா (ஜிவி பிரகாஷ்).
அவரது நண்பர் ஆகிய ராக்கி கஞ்சா விற்பனை செய்து வருகிறார் (நந்தா ராம்).
சிறுவயதில் சாக்லேட் திருடிய குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று வருகிறார் அவரது இன்னொரு நண்பர் கலை( பசங்க பாண்டி ). மனம் திருந்தி வாழ நினைக்கிறார்.
இவர்கள் 3 பேர் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களை கொண்டு திரைப்படம் இயங்குகிறது.
காவேரி நகர் ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்கள் 3 பேரும்.யாருமே அந்த ஊரில் வேலை கொடுக்க முன்வராத காரணத்தினால் ஊர் பெயரை மாற்றிச் சொல்லி ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார் கலை.
காவேரி நகரில் உள்ள இளைஞர்கள் செய்து தொடர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு வருகிறார் காவல்துறை அதிகாரி ரவி மரியா. அவர் சொல்லும் வேலையை செய்து வருகிறார் ராக்கி.
அந்த வேலையைச் செய்வதில் இருந்துதான் பெரும் சிக்கலில் மாட்டுகிறார் ராக்கி. அதன் பிறகு அந்த மூன்று பேரின் வாழ்க்கையும் மாறுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி முழுவதும் அம்மா சென்டிமென்ட், நண்பன் சென்டிமென்ட், அக்கா சென்டிமென்ட் என்று இப்படியே போகிறது. அதன் பிறகு அடுத்த பாதி முழுவதும் விறுவிறுப்பாக நடக்கிறது.
இடையிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் அபர்ணதி காதல் காட்சிகள் மக்களை ரசிக்க வைக்கின்றன. வெயில் திரைப்படத்திற்கு பிறகு மறுபடியும் ஜெயில் திரைப்படத்தை எடுத்து தனது கேரியரை மீண்டும் தொடங்கி வைக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.