படம் - முருங்கைக்காய் சிப்ஸ்
நடிகர்கள் - சாந்தனு, பாக்யராஜ், ஊர்வசி, அப்துல்யா ரவி, மனோபாலா, யோகி பாபு.
இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு திருமண மண்டபத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொள்கிறார்கள் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அதுல்யா ரவி .
பாக்யராஜ் திரைப்படத்தில் சாந்தனு தாத்தாவாக வருகிறார்.பாக்யராஜ் க்கு 900 கோடி சொத்துக்கள் இருக்கின்றன.
அந்த சொத்துக்களை பரம்பரை பரம்பரையாக காமம் சினம் கோபம் அனைத்தையும் கட்டுப்படுத்தி ஒரே மனைவி என்று வாழும் ஒருவனுக்கு தான் தனது சொத்துக்களை கொடுப்பதாக ஐதீகம்.
பாக்கியராஜ் சாந்தி முகூர்த்தத்திற்கு முன்பு சாந்தனுவிடம் இன்று ஒரு நாள் மட்டும் சாந்தி முகூர்த்தம் நடக்காமல் இருக்க வேண்டும் என்று கூறிவிடுவார். இதைக் கேட்ட சாந்தனு பதறிப் போய் முடியாது என்று சொல்லிவிடுவார்.
ஆனால் பாக்யராஜ் மேலும் " இன்று மட்டும் உனது நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நம்ம பரம்பரை சொத்து 900 கோடி உனக்கு கிடைக்கும்;அப்படி ஏதாவது நடந்து விட்டால் அந்த சொத்துக்கள் முழுவதும் பக்கத்தில் இருக்கும் அனாதை ஆசிரமத்திற்கு போய் சேர்ந்து விடும் " என்று கண்டிப்பாக கூறிவிடுவார்.
தாதாத்தாவின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சாந்தனு தன்னை கட்டு கோப்பாக வைத்து இருப்பார். ஆனால் நாயகி அதுல்யா தனது இளமையை காட்டி அவரை உசுப்பேத்தி கொண்டே இருப்பார்.
இதற்கு இடையில் சொத்துக்களை பறி போய்விட வேண்டும்; அந்த சொத்துக்கள் பாதி தனக்கு கிடைக்க வேண்டும் என்று மனோபாலா திட்டமிட்டு பல சூழ்ச்சிகளை செய்கிறார்.
யோகி பாபு மற்றும் அவரது பிக் பாஸ் கூட்டாளிகள் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர்கள் சேர்ந்து செய்யும் ரகளைகள் மக்களை ரசித்து பார்க்க வைக்கின்றன.