படம் - எம்ஜிஆர் மகன்
நடிகர்கள்- சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்,
நாட்டு மருத்துவத்தை இயற்கையான முறையில் செய்து பல பேரின் நோய்களைப் போக்கி வருபவன் நாட்டு மருத்துவர் எம்ஜி ராமசாமி என்கிற சத்யராஜ். சத்யராஜ் ஆறுகளின் மனைவி சரண்யா பொன்வண்ணன்.
இந்த எம்ஜி ராமசாமி அவரின் மகன் சசிகுமார். சரண்யா பொன்வண்ணன் அவரின் தம்பி சமுத்திரக்கனி.
கதை என்னவென்றால் பரம்பரை பரம்பரையாக மூலிகைகள் எடுத்து மக்களின் உயிரை காப்பாற்றி வரும் மலையை கல்குவாரி யாக மாற்ற திட்டமிடுகிறது ஒரு கும்பல்.
இவற்றை எதிர்த்து கேட்ட சத்யராஜ் நியாயப்படி கோர்ட்டு மூலம் அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று போராடினார்.
ஆனால் இவர் உதவி கிடைக்கும் அனைத்து வக்கீல்களும் எதிரிகளுக்கு சாதகமாக பணம் வாங்கிக்கொண்டு மாறிவிடுவதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதற்காக தன் மகன் சசிகுமாரை ஒரு நல்ல வக்கீல் ஆக மாற்றி இந்த மலையை விட்டு விட வேண்டும் என்று போராடுகிறார் சத்யராஜ்.
ஆனால் விளையாட்டுத்தனமாக திரியும் சசிகுமார் ஒழுங்காக படிக்கவில்லை. தேர்வில் அனைத்தும் தோல்வி அடைந்து சக நண்பர்களுடன் சேர்ந்து ஒரு டீ கடையை எரித்து விடுகிறார்.
இதில் கோபமடைந்த சத்யராஜ் மகன் என்று கூட பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார்.
ஆத்திரமடைந்த சசிகுமார் என்னுடைய புகைப்படம் இந்த நியூஸ் பேப்பரில் முதல் பக்கத்தில் வந்தால் மட்டுமே நான் வீட்டுக்கு வருவேன் என்று சபதமிட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.
அவருடன் சேர்ந்து சமுத்திரகனியும் என் மாப்பிள்ளை இந்த சபதத்தில் ஜெயித்தால் மட்டுமே நான் வேட்டி கட்டி வேன் என்று சபதமிட்டு வேட்டியை அவிழ்த்து போட்டுவிட்டு சென்றார்.
இப்படியே அப்பாவும் மகனும் கலகலப்பாக சண்டையிட்டுக் கொண்டு செல்வதுமாக சசிகுமார் சமுத்திரக்கனி உடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் இப்படியே படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் ஹீரோயின் சென்னையிலிருந்து இந்த ஊருக்கு வந்து அவரது அப்பா கை கால் இழுத்துக் கொண்டு நடக்க முடியாமல் சிரமப்படுவதால் சத்யராஜ் இடம் மருத்துவம் பார்த்து சரி பண்ணுவதற்காக வருகிறார்.