படம்- ஜெய்பீம்
நடிகர்கள்- சூரியா, பிரகாஷ் ராஜ், ரஜினா விஜயன், லிஜோ மோல், ஜோஸ்
இயக்குநர்- டி. ஜே.ஞானவேல்
தயாரிப்பு- 2D ENTERTAINMENT (ஜோதிகா சூரியா)
2021 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம்.
இருளர் இன மக்களின் துன்பங்களையும், அவர்கள்மீது விழும் பழிஎடுத்துரைக்கும் தேசிய விருதை பெறப்போகும் திரைப்படம்.
இருளர் இனத்தைச் சேர்ந்தவர் ராசாக்கண்ணு மற்றும் அவர்களது கூட்டாளிகள் மொசகுட்டி,இருளப்பன். ராசாக்கண்ணு உடைய மனைவி செங்கேணி.
ஊர் ஊராக அகதிகளாக திரிந்த இந்த இருளர் இன கூட்டம் ஒரு ஊரில் தஞ்சம் அடைந்தது. அந்த ஊரில் இருந்த மேல்குடி ஜாதியினர் இவர்களை பாம்பு பிடித்தல், எலி வலை நோண்டி எலிகளை பிடித்தல் போன்ற தங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக அப்பாலே வைத்திருந்தார்கள்.
அப்படி இருக்கும் இந்த இருளர் இன மக்கள் மீது அடிக்கடி போலீசார்கள் பல்வேறு வழக்கு பதிவுகளை திணித்து அவர்களே ஜெயிலில் அடைத்து கொடுமைப்படுத்தி வந்தார்கள்.
தன் கடமைகளில் சின்சியர் ஆகவும் ஏழைகள் மீது இழைக்கப்படும் அநியாயங்களை எதிர்த்து கேட்கும் ஒரு வழக்கறிஞராக வலம் வருகிறார் சந்துரு என்கிற சூர்யா.
ஒரு முறை ஊர் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாகவும் அது பிடிப்பதற்காக இருளர் இனத்தைச் சேர்ந்த ராசா கண்ணுவை அழைத்து செல்கிறார்கள்.
அந்த ஊர் செல்வந்தர் வெளியூருக்கு சென்றுவட அவரின் வீட்டில் இருந்த நகை பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாம்பு பிடிக்க வந்த ராசா கண்ணு மீது நகை திருடி விட்டதாக பொய் வழக்குப் போட்டு போலீசார்கள் ஜெயிலில் உள்ளே வைத்தார்கள். ராசா கண்ணுடன் அவரது கூட்டாளிகள் மற்றும் சொந்த அக்கா ஆகியோரையும் லாக்கப்பில் அடைத்து போலீசார்கள் பலவந்தமாக துன்பப்படுத்தி வந்தார்கள்.
ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கர்ப்பமாக இருக்கும் செங்கேணி தன் கணவரின் இந்த நிலையை தட்டி கேட்க முடியாமல் திக்கு முக்காடினாள்.
என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் செங்கேணி கடைசியில் சந்துரு வழக்கறிஞரிடம் வந்த சேர்ந்தார். அவரும் வழக்கு விவரங்களை கேள்விபட்டு கண்டிப்பாக இந்த பிரச்சினையை மேலிடத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று துடியாய் துடித்தார்.