படம்- பொன் மாணிக்கவேல்
நடிகர்கள் - பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ்
இயக்குநர்- ஏ. சி. முகில் செல்லப்பன்.
இசை - D.இமான்
பிரபுதேவா நடித்த 50 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவின் பெயர் பொன் மாணிக்கவேல். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் இருக்கிறார்.
இத்திரைப்படத்தின் கதை ஒரு நீதிபதி மரணத்தில் ஆரம்பிக்கிறது. நீதிபதி ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.
இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையில் சரியான ஆள் இல்லை என்று உயரதிகாரிகள் புலம்ப சில காவலர்கள் "சார் ஒரு ஆள் இருக்கிறார். நம்ம காவல் துறையில் வேலை செய்து பிறகு ஜெயிலுக்கு போய் அதன் பிறகு ஒரு பணக்கார பங்களாவில் மாடு மேய்த்து வரும் பொன் மாணிக்கவேல் தான் அவர்' என்று கூற உயர் அதிகாரிகள் அவரை கூட்டிக்கொண்டு வருமாறு சிபாரிசு செய்கிறார்கள்.
உயரதிகாரிகள் வேண்டுதலின் படி பொன்மாணிக்கவேல் காவல்துறையில் மீண்டும் பணியில் இணைகிறார்.
இந்த திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் வேலை என்னவென்றால் அடிக்கடி வந்து செல்வது தான். அடிக்கடி ஹீரோயினுடன் ரொமான்ஸ் மற்றும் லவ் சாங்ஸ் என ஜோராக கொண்டு சென்றிருக்கிறார்கள்.